இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 11 March 2024 6:56 AM IST (Updated: 11 March 2024 7:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னி ராசிக்காரர்களுக்கு வரன்கள் வாயில் தேடி வரும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் மாசி மாதம் 28-ந்தேதி திங்கட்கிழமை.

திதி: பிரதமை திதி பகல்(12.50)க்கு மேல் துவிதியை திதி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு(1.40)க்கு மேல் ரேவதி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், ஸ்ரீ அராளகேசியம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீசுவரரர் கோவிலில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் தெப்ப உற்சவம். இன்று சந்திர தரிசனம்.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்களால் பலன் உண்டு.

ரிஷபம்: விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நீடிப்பு உண்டு.

மிதுனம்: புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழிலில் லாபத்தைப் பெருக்குவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

கடகம்: மதியத்திற்குமேல் மனக்கசப்புகள் ஏற்படும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க விரயமும், அலைச்சலும் ஏற்படும்.

சிம்மம்: நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும்.

கன்னி: நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்: புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலையை உயர்த்தப் புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

விருச்சிகம்: யோகங்கள் வந்து சேரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வரவு திருப்தி தரும். தொழில்ரீதியாக திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

தனுசு: உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களுக்காகச் செலவு செய்வர். தொழில் முன்னேற்றம் உண்டு.

மகரம்: கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள்.

கும்பம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.

மீனம்: நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: சிம்மம்.


Next Story