இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கும்ப ராசிக்காரர்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் மாசி மாதம் 29-ந்தேதி செவ்வாய்க்கிழமை.
திதி: துவிதியை திதி காலை(10.34)க்கு மேல் திருதியை திதி.
நட்சத்திரம்: ரேவதி நட்சத்திரம் இரவு(12.13)க்கு மேல் அசுவினி நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.
சூலம்: வடக்கு
ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் வீதியுலா, தேவகோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவைகாவூர், திருக்கோகர்ணம் கோவில்களில் சிவபெருமான் கிரி பிரதட்சணம்.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: யோகமான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் வந்து சேரும்.
மிதுனம்: வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு. திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
கடகம்: உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
சிம்மம்: அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்லவேண்டிய நாள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கன்னி: நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள், தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
துலாம்: இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிகம்: வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
தனுசு: வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், அரை குறையாக நின்ற பணி தொடரும்.
மகரம்: வருமானம் இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வெற்றிநடை போடும். பாராட்டும், புகழும் கூடும்.
கும்பம்: வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகம் சம்பந்தமாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
மீனம்: சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் பணியாளர்களால் தொல்லையுண்டு. அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
சந்திராஷ்டமம்: இரவு 12.13 வரை சிம்மம் பிறகு கன்னி.