இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புகழ்மிக்கவர்களின் சந்திப்பு எளிதில் கிடைத்து மகிழும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் மாசி மாதம் 30-ந்தேதி புதன்கிழமை.
திதி: திருதியை திதி காலை(8.27)க்கு மேல் சதுர்த்தி திதி.
நட்சத்திரம்: அசுவினி நட்சத்திரம் இரவு(10.58)க்கு மேல் பரணி நட்சத்திரம்.
யோகம்: மரணயோகம் இரவு(10.58)க்கு மேல் சித்தயோகம். சமநோக்குநாள்.
சூலம்: வடக்கு
ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
ரிஷபம்: யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.
மிதுனம்: தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
கடகம்: செல்வாக்கு உயரும் நாள். தொழில்ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
சிம்மம்: கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் பிரச்சினைகள் உருவாகும். காலை நேரத்திலேயே விரயங்கள் உண்டு. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
துலாம்: சவால்களைச் சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தியுண்டு. மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.
விருச்சிகம்: வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள், தொழிலில் வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
தனுசு: தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் குறுக்கீடுகள் அகலும்.
மகரம்: முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்தவர்கள் இன்று மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவர்.
கும்பம்: யோகமான நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம்.
மீனம்: மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திடீர் பயணமொன்றால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: கன்னி.