இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடக்கிறது.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 8-ந்தேதி வியாழ்க்கிழமை.
திதி: துவாதசி திதி நாள் முழுவதும்
நட்சத்திரம்: ஆயில்யம் நட்சத்திரம் இரவு (3.26)க்கு மேல் மகம்நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். கீழ்நோக்குநாள்.
சூலம்: தெற்கு
ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம்: கலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், திருச்சுழி சிவன் பவனி. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் யானை வாகனத்தில் புறப்பாடு. திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடக்கிறது.
ராசிபலன்:
மேஷம்
சொன்ன சொல்லை நிறை வேற்றத்துடிப்புடன் செயல்படும் நாள், தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். பழைய நட்பை புதுப்பித்துக் கொள்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
ரிஷபம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நாவன்மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள், வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்ளை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொகை வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கன்னி
விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
துலாம்
திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படி சிறப்பாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தக்க சமயத்தில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கேட்ட சலுகைகளைத் தருவர்.
தனுசு
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்பச்சுமை அதிகரிக்கும்.
மகரம்
செல்வாக்கு உயரும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். உத்தியோக உயர்வு உறுதியாகலாம். தனவரவு தாராளமாக வந்து சேரும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
கும்பம்
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனம் மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். வாரிசுகளால் பெருமை சேரும்.
மீனம்
துன்பங்கள் தூளாகும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உள்ளொன்று வைத் துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர்.