இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
சென்னை,
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 9-ந்தேதி வெள்ளிக்கிழமை.
திதி: துவாதசி திதி காலை (6.53)க்கு மேல் திரயோதசி திதி
நட்சத்திரம்: மகம் நட்சத்திரம் பின்இரவு (5.51)க்கு மேல் பூரம் நட்சத்திரம்.
யோகம்: மரண யோகம் பின்இரவு (5.51)க்கு மேல் சித்தயோகம். கீழ்நோக்குநாள்.
சூலம்: மேற்கு
ராகுகாலம்: கலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. மயிலை கபாலீஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், மதுரை வெங்கடேச பெருமாள் தேர் பவனி.
இன்றைய ராசிபலன்:
மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள், நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் சூழ்நிலை உண்டு, தொட்ட காரியத்தில் வெற்றி ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.
கடகம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்ய இயலாது. அத்தியாவசிப் பொருட்களை வாங்க அதிகம் செலவிட நேரிடலாம். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.
சிம்மம்
பொன்னான நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தூரதேசத்திலிருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள், வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு உண்டு. அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.
துலாம்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உடல்நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்
தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் மாறும். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
தனுசு
செலவுகள் கூடும் நாள். சேமிப்பு கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு உங்களிடமே வரலாம். குடும்ப பெரியவர்கள் உங்கள் செயலில் குறைபாடுகளைக் காண்பர்.
மகரம்
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். குடும்பச்செலவுகள் கூடும். தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு. அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது.
கும்பம்
வளர்ச்சிபாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் உத்தியோகத்திற்கு அனுகூலத்தைத் தரும். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். வருமானம் உயரும்.
சந்திராஷ்டமம்: மகரம்