இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கந்தன் புகழ்பாடிக் காரியங்களைத் தொடங்க வேண்டிய நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.
திதி: சதுர்த்தசி திதி காலை(10.53)க்கு மேல் பவுர்ணமி திதி.
நட்சத்திரம்: பூரம் நட்சத்திரம் காலை(8.26)க்கு மேல் உத்திரம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம் காலை(8.26)க்கு மேல் அமிர்தயோகம். முகூர்த்தநாள். பங்குனி உத்திரம்.
சூலம்: மேற்கு
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
திரிசிராமலை ஸ்ரீதாயுமானவர் தெப்போற்சவம் கல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாணம். பரமகுடி ஸ்ரீஅன்னை முத்தாலம்மன், பழனி ஸ்ரீஆண்டவர் தலங்களில் ரதோற்சவம். கழுகுமலை ஸ்ரீமுருகப் பெருமான், கங்கை கொண்டான் ஸ்ரீவைகுண்டபதி, திருச்சுழி திருமேனிநாதர் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். இன்று பங்குனி உத்திரம். பவுர்ணமி. ஹோலிப் பண்டிகை. காம தகனம். சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் பவனி.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். புதிய பாதை புலப்படும். புண்ணிய காரியங்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும்.
ரிஷபம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
மிதுனம்: தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
கடகம்: கனிவாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும். கல்யாண வாய்ப்புக் கைகூடும்.
சிம்மம்: நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் தொல்லையுண்டு.
கன்னி: யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூடவெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் சம்பந்தமாக நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
துலாம்: வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும். குடும்பத்தினர்களின் தடைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சிகம்: அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும் நாள். மருத்துவச் செலவுகள் உண்டு. கவனிக்காது விட்ட உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்கள் வந்திணைவர்.
தனுசு: மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். நிதி நெருக்கடி அகலும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்: நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மனக் குழப்பம் மதியத்திற்கு மேல் அகலும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். வரவு திருப்தி தரும்.
கும்பம்: வீண் செலவுகள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும். வியாபார விரோதம் உண்டு.
மீனம்: இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும்.
சந்திராஷ்டமம்: மாலை (3.05)க்கு வரை மகரம். பிறகு கும்பம்.