இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 25 March 2024 7:00 AM IST (Updated: 25 March 2024 7:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னி ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 12-ம் தேதி திங்கட்கிழமை

திதி: பௌர்ணமி திதி பகல் (12.55)க்கு மேல் பிரதமை திதி.

நட்சத்திரம்: உத்திரம் நட்சத்திரம் காலை (10.59)க்கு மேல் அஸ்தம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தண்டியலில் ஸ்ரீ ரங்க மன்னார் யானை வாகனத்தில் திருக்கல்யாணம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கங்கை கொண்டான் ஸ்ரீ வைகுண்டபதி சாற்றுமுறை. பரமகுடி ஸ்ரீ முத்தாலம்மன், திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேரோட்டம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிச் சிந்திப்பீர்கள்.

ரிஷபம்: அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவ முன்வருவர். தொழில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்: குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். அலங்காரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கடகம்: தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். கெளரவத்தைக் காப்பாற்றுவீர்கள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். கூட்டுத் தொழில் வெற்றி தரும்.

சிம்மம்: சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை துாரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

கன்னி: அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும்.

துலாம்: புது முயற்சிகளில் வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்: வளர்ச்சி கூட வடிவேலனை வழிபட வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

தனுசு: வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் வந்துசேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

மகரம்: இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பொருளாதார நிலை உயரும்.

கும்பம்: எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு. வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

மீனம்: வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வாங்கல் கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: கும்பம்.


Next Story