இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கன்னி ராசிக்காரர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.
திதி: சஷ்டி திதி மாலை(5.46)க்கு மேல் சப்தமி திதி.
நட்சத்திரம்: கேட்டை நட்சத்திரம் இரவு(7.22)க்கு மேல் மூலம் நட்சத்திரம்.
யோகம்: மரணயோகம் இரவு(7.22)க்கு மேல் அமிர்தயோகம். சமநோக்குநாள்.
சூலம்: மேற்கு
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் தலங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகன உலா. சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடை ஏற்படும். சகோதரர்களாலும், நண்பர்களாலும் விரயங்கள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
ரிஷபம்: பயணத்தால் பலன் கிட்டும் நாள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்திற்காக செலவிடுவீர்கள, உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
மிதுனம்: திருமண முயற்சி வெற்றி பெறும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடிதப் போக்குவரத்து கவலையைப் போக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
கடகம்: தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தியொன்று தூரத்திலிருந்து தொலைபேசி மூலம் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் கேட்ட மாறுதல் உண்டு. வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
சிம்மம்: வருமானம் திருப்தி தரும் நாள். செல்வ வளம் பெருகும். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக் கும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி: சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்: பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சிக்கலான சில காரியங்களைக் கூடச் சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
விருச்சிகம்: உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.
தனுசு: பிரச்சினைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். புண்ணிய காரியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்: வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். வியாபாரத்திலுள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.
கும்பம்: செல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கட்டிடப்பணி தொடரும்.
மீனம்: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். பயணங்களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் பிறருக்கு பொறுப்பு சொல்லியதால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: இரவு (7.22) வரை மேஷம்; பிறகு ரிஷபம்.