இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

தனுசு ராசிக்காரர்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 19-ம் தேதி திங்கள்கிழமை.

திதி: சப்தமி திதி மாலை(4.54)க்கு மேல் அஷ்டமி திதி.

நட்சத்திரம்: மூலம் நட்சத்திரம் இரவு (7.08)க்கு மேல் பூராடம் நட்சத்திரம்.

யோகம்: சித்த யோகம். கீழ்நோக்குநாள். கரிநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை

இன்றைய தினப்பலன்:

மேஷம்: புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு உண்டு. இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

ரிஷபம்: பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

மிதுனம்: தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

கடகம்: எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சி பலன் தரும்.

சிம்மம்: அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நாள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுதவற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் திடீர் லாபம் தித்திக்க வைக்கும்.

கன்னி: பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது.

துலாம்: முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு, பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

விருச்சிகம்: சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாரிசுகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். பணவரவில் திருப்தி ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

தனுசு: எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தக் காரியத்தையும், எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

மகரம்: தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. பிற இனத்தாரின் ஆதரவோடு பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்: வருமானம் அதிகரித்து வளர்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தியொன்று மனை தேடி வந்து சேரலாம். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

மீனம்: வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். வாங்கல் கொடுக்கல் ஒழுங்காகும். தொழிலில் லாபம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

சந்திராஷ்டமம்: ரிஷபம்.


Next Story