இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 4 April 2024 6:43 AM IST (Updated: 4 April 2024 7:12 AM IST)
t-max-icont-min-icon

மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 22-ந்தேதி வியாழக்கிழமை.

திதி: தசமி திதி பகல்(11.59)க்கு மேல் ஏகாதசி.

நட்சத்திரம்: திருவோணம் நட்சத்திரம் மாலை (4.14)க்கு மேல் அவிட்டம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள். சிரவண விரதம்.

சூலம்: தெற்கு

ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

நல்லநேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று ஒழுகைமங்கலம் ஸ்ரீ மணியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவெள்ளறை ஸ்ரீ சுவோதத்திரி நாதர் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். வெளியூரிலிருந்து வியக்கும் தகவல் வரலாம். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

ரிஷபம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.

மிதுனம்: எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாது. உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கடகம்: மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். வாங்கல், கொடுக்கல் களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற் சியில் அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்: நேற்றைய பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

கன்னி: எதிரிகள் விலகும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். உடன்பணிபுரிவர்களுடன் உற்சாகச் சந்திப்பு உண்டு.

துலாம்: வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் இடத்தில் பாராட்டுப் பெறுவீர்கள். வீண்பழிகள் அகலும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

விருச்சிகம்: வருமானம் திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். அதிகாலையிலேயே சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். யாருடைய பணமாவது உங்கள் கைகளில் புரளும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மகரம்: புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். மருத்துவச் செலவுகள் உருவாகலாம்.

கும்பம்: சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

மீனம்: யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: இரவு(3.30) வரை மிதுனம்; பிறகு கடகம்.


Next Story