இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 5 April 2024 7:05 AM IST (Updated: 5 April 2024 7:14 AM IST)
t-max-icont-min-icon

தாயமங்கலம் முத்துமாரியம்மன் அலங்கார தேர்.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 23-ந்தேதி வெள்ளிக்கிழமை.

திதி: ஏகாதசி திதி காலை(9.59)க்கு மேல் துவாதசி திதி.

நட்சத்திரம்: அவிட்டம் நட்சத்திரம் பகல்(2.46)க்கு மேல் சதயம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: மேற்கு

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

நல்லநேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

தாயமங்கலம் முத்துமாரியம்மன் அலங்கார தேர். சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று விழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் பவனி.

இன்றைய ராசிப்பலன்:

மேஷம்

அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்

நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. கையிருப்புக் கரையலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

மிதுனம்

தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் பகை பாராட்ட வேண்டாம்.

கடகம்

மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். முயற்சியில் குறுக்கீடு உண்டு.

சிம்மம்

தொழில் போட்டிகள் அகலும்நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும். எதிரிகள் விலகுவர்.

கன்னி

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச்செய்திகள் வந்துசேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். எடுக்கும் முயற்சியில் சற்று தாமதமானாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.

துலாம்

காலையில் பணப்புழக்கமும் மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் தாமதம் உண்டு. உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

விருச்சிகம்

புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.

தனுசு

ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணி புரிவீர்கள். பூமிப் பிரச்சினை தீரும். புதியதொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

மகரம்

தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.

கும்பம்

முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு.

மீனம்

நன்மைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும், உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர்.

சந்திராஷ்டமம்:கடகம்


Next Story