இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 6 April 2024 1:03 AM GMT (Updated: 6 April 2024 9:18 AM GMT)

மன்னார்குடி ராஜகோபால சுவாமி பரமபத நாதன் திருக்கோலம்.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 24-ந்தேதி சனிக்கிழமை.

திதி: துவாதசி திதி காலை(7.30)க்கு மேல் திரயோதசி திதி.

நட்சத்திரம்: சதயம் நட்சத்திரம் பகல்(1.11)க்கு மேல் பூரட்டாதி நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம் பகல் (1.11)க்கு மேல் மரணயோகம். மேல்நோக்கு நாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

மன்னார்குடி ராஜகோபால சுவாமி பரமபத நாதன் திருக்கோலம். தாயமங்கலம் முத்துமாரி அம்மன் பால்குடம்.

இன்றைய ராசிப்பலன்:

மேஷம்

முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர்.

ரிஷபம்

தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு வந்து சேரும்.

மிதுனம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

கடகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

சிம்மம்

திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடிவரும். நண்பர்கள் நம் பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

கன்னி

குறைகள் அகலும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்

துலாம்

திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே நடைபெறும், வரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. வியாபார வளர்ச்சி உண்டு.

விருச்சிகம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு

தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

மகரம்

வருமானம் வரும் வழியைக்கண்டு கொள்ளும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுல ஈடுபாடு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

கும்பம்

பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்துசேரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். வருமானம் உயரும்.

மீனம்

தனவரவு திருப்தி தரும் நாள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர்கிடைக்கும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

சந்திராஷ்டமம்: சிம்மம்


Next Story