இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
செல்வ வளம்பெருக சிவனை வழிபட வேண்டிய நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.
திதி: சதுர்த்தசி திதி இரவு(2.44)க்கு மேல் அமாவாசை திதி.
நட்சத்திரம்: பூரட்டாதி நட்சத்திரம் பகல்(11.33)க்கு மேல் பூரட்டாதி நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம் பகல் (11.33)க்கு மேல் அமிர்தயோகம். கீழ்நோக்கு நாள்.
சூலம்: மேற்கு
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்:
செல்வ வளம்பெருக சிவனை வழிபட வேண்டிய நாள். சமயபுரம் மாரியம்மன் விழா தொடக்கம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை. தாயமங்கலம் முத்துமாரி அம்மன் பவனி
இன்றைய ராசிப்பலன்:
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பண நெருக்கடி அகலும், குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.
ரிஷபம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். வருமானம் உயரும்.
மிதுனம்
விரயங்கள் ஏற்படும் நாள். வீடுமாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.
கடகம்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள் உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர், புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள், தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உறவினர் பகை உருவாகும்.
கன்னி
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். மனக் குழப்பம் மாறி மகிழ்ச்சி ஏற்படும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
துலாம்
புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
விருச்சிகம்
தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர் பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்த வர்களின் ஒத்துழைப்பு கிடைக் கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
தனுசு
யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.
மகரம்
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். அரசாங்க உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
கும்பம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும்.
மீனம்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். சகோதரர்கள் ஆதரவு திருப்தி தரும். நேற்றையப் பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் கூட்டாளிகளின் கருத்து வேறுபாடுகள் அகலும்.