இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தனுசு ராசிகாரர்களுக்கு சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 27-ந்தேதி செவ்வாய்க்கிழமை.
திதி: பிரதமை திதி இரவு(10.20)க்கு மேல் துவிதியை திதி.
நட்சத்திரம்: ரேவதி நட்சத்திரம் காலை (8.26)க்கு மேல் அசுவினி நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்
சூலம்: வடக்கு
ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்:
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வளர்ச்சி கூடும் நாள். மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். குற்றாலம் குற்றாலநாதர் தேர் பவனி. குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.
ராசிப்பலன்:
மேஷம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வெளிநாட்டு முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
சோர்வு அகன்று சுறுசுறுப்பாகப் பணியாற்றும் நாள். இட இடமாற்றங்களால் இனிமை ஏற்படும். உத்தியோகத்தில் வழக்கத்தைவிடக் கூடுதலான நேரம் பணிபுரிய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சி கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். . புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
கடகம்
தைரியத்தோடும், தன்னம்பிக் கையோடும் செயல்படும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்த பொருளொன்று எளிதில் கிடைக்கும்.
சிம்மம்
காலை நேரம் சலசலப்பும். மாலை நேரம் கலகலப்பும் ஏற்படும் நாள். கருத்து வேறுபாடுகள் அகலும், தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றை கடைசி நேரத்தில் மாற்றியமைப்பீர்கள், விரயம் உண்டு.
துலாம்
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த தகவல் வந்துசேரலாம். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொழில் முன்னேற்றமுண்டு.
விருச்சிகம்
குழப்பங்கள் தீரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் கூட்டாளிகள் லாபம் தரும் தகவலைக் கொடுப்பர். வாகனம் வாங்கும் வாய்ப்புக் கைகூடும். நேர்மறைச் சிந்தனைகள் வெற்றி பெறும்.
தனுசு
நல்ல செய்திகள் நாடி வந்து சேரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மகரம்
காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த நற்பலன் உண்டு.
கும்பம்
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள், வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் வெற்றி பெறும். வருமானம் திருப்தி தரும்.
மீனம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.