இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுதல்.

இன்றைய பஞ்சாங்கம்:

14.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 1-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை.

திதி: சஷ்டி திதி மாலை மாலை(4.42)க்கு மேல் சப்தமி திதி.

நட்சத்திரம்: திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு (5.57)க்கு மேல் புனர்பூசம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம், மேல்நோக்குநாள். சஷ்டிவிரதம். தமிழ்வருடப் பிறப்பு.

ஆனந்த வாழ்வமைய ஆனைமுகப் பெருமானை வழிபட வேண்டிய நாள்.

நல்லநேரம்: காலை: 7.30-8.30, மதியம் : 2.00 -3.00

ராகுகாலம்: மாலை 4.306.00

எமகண்டம்: மதியம் : 12.00-1.30

குளிகை : மாலை 3.00-4.30

வாரசூலை: மேற்கு, சூரிய உதயம் : 6.14

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

மாவூற்று வேலப்பர் திருவிழா காட்சி. திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிதேகம். மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுதல்.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

ரிஷபம்: நன்மைகள் நடைபெறும் நாள். வியாபார முயற்சி வெற்றி தரும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

மிதுனம்: நம்பிக்கைகள் நடைபெறும் நாள். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களைவிட்டு விலகுவர்.

கடகம்: சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வரவு போதுமானதாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், பயணம் பலன் தரும்.

சிம்மம்: நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாள்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.

கன்னி: பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள், இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.

துலாம்: முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். நிதி நிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் லாபம் கிட்டும்.

விருச்சிகம்: வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர்.

தனுசு: விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வாகன பராமரிப்பு செலவுகளால் வாட்டம் ஏற்படும்.

மகரம்: சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

கும்பம்: நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு.

மீனம்: அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்ள ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

பொதுப்பலன்

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும் நாள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேற விநாயகரை வழிபட வேண்டிய நாள். சந்திராஷ்டமம்: விருச்சிகம்.


Next Story