இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மீன ராசிக்காரர்களுக்கு உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் சித்திரை மாதம் 2-ந்தேதி திங்கட்கிழமை.
திதி: சப்தமி திதி மாலை(4.56)க்கு மேல் அஷ்டமி திதி.
நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம் (60.00) நாள் முழுவதும்.
யோகம்: அமிர்தயோகம், சமநோக்குநாள். முகூர்த்தநாள்.
சூலம்: கிழக்கு
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
நல்லநேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
கார்த்திகை, உத்ரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். மதுரை மீனாட்சி-சொக்கநாதர் தந்தப்பல்லக்கில் பவனி. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் விழா தொடக்கம். திருத்தணி முருகன் புறப்பாடு.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். பணத்தேவைகள் பூர்த்தியாகலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்: உறவினர்கள் உதவிக்கரம் நீட் டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு.
மிதுனம்: நிதிநிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். உத்தியோகத்தில் நேற்று நடைபெற்ற வாக்குவாதத்தால் மனக்குழப்பம் ஏற்படும்.
கடகம்: அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். திடீர் பயணமொன்று ஏற்படலாம். ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.
சிம்மம்: சலுகைகள் கிடைத்துச் சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு.
கன்னி: வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வெளியூர் பயணமொன்றால் கையிருப்புக் கரையும். குடும்பத்தினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பின்னர் வருத்தமடைய நேரிடலாம்.
துலாம்: மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்பாராத விரயம் உண்டு. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடியடையாமல் போகலாம். வருமானத்தை விடச் செலவு கூடும்.
விருச்சிகம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். பணத்தேவைகள் அதிகரிக்கும்.
தனுசு: பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். சொத்துகளால் லாபம் உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மகரம்: உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து சேரும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை குறையலாம்.
கும்பம்: களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கனிவாகப் பேசிக்காரியங்களைச் சாதித்துக்கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்: தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: இரவு (12.51) வரை விருச்சிகம்; பிறகு தனுசு.