இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 17 April 2024 12:55 AM GMT (Updated: 17 April 2024 1:17 AM GMT)

நலங்கள் வந்து சேர ராமபிரான், சீதாதேவி மற்றும் ராமதூதனை வழிபட வேண்டிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 4-ந்தேதி புதன்கிழமை.

திதி: நவமி திதி மாலை(6.54)க்கு மேல் தசமி திதி.

நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் காலை (8.39)க்கு மேல் ஆயில்யம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

நல்லநேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

ராமநவமி. நலங்கள் வந்து சேர ராமபிரான், சீதாதேவி மற்றும் ராமதூதனை வழிபட வேண்டிய நாள். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் பவனி. மதுரை மீனாட்சி-சொக்கநாதர் வரலாற்று லீலை. சீர்காழி சிவன் தேர்.

ராசிப்பலன்:

மேஷம்

நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும்.

ரிஷபம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள், காரிய வெற்றிக்குமாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மிதுனம்

உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. விலகிச் சென்றவர் | கள் விரும்பி வந்து சேருவர்.

கடகம்

மகிழ்ச்சி கூடும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நாட்டுப்பற்று மிக்க ஒருவரால் வீட்டுப் பிரச்சினை தீரும். சொத்து வாங்கும் சூழ்நிலைக்கு கேட்ட உதவி கிடைக்கும்.

சிம்மம்

தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்மந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும், பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

கன்னி

வீண் விவகாரங்கள் விலகும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் உண்டு. நீண்டநாளையப் பகையொன்று நட்பாகும். உத்யோகத்திலிருந்த குறுக்கீடுகள் அகலும்.

துலாம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடுமாற்றம், நாடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

விருச்சிகம்

யோகமான நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். நண்பர்களின் உத | வியோடு தொழிலில் வளர்ச்சி காண் பீர்கள். புதிய திட்டங்களுக்கு மாற் | றினத்தவர்களின் ஆதரவு உண்டு.

தனுசு

ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குறைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

மகரம்

விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும், எதிர்பாராத தனலாபம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. உத்யோக மாற்றம் உறுதியாகும்.

கும்பம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும்நாள். தடைகள் விலகும். தனவரவு உண்டு. தாழ்வு மன்னப் பாமையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.

மீனம்

காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும், விலகிச் சென்றசொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.


Next Story