இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 18 April 2024 12:50 AM GMT (Updated: 18 April 2024 12:51 AM GMT)

மதுரை மீனாட்சி-சொக்கநாதர் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 5-ந்தேதி வியாழக்கிழமை.

திதி: தசமி திதி இரவு(8.31)க்கு மேல் ஏகாதசி திதி.

நட்சத்திரம்: ஆயில்யம் நட்சத்திரம் பகல் (10.51)க்கு மேல் மகம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம். கீழ்நோக்குநாள்

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

நல்லநேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

சித்திரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். மதுரை மீனாட்சி-சொக்கநாதர் பவனி. சமயபுரம் மாரியம்மன் பவனி.

ராசிப்பலன்:

மேஷம்

உற்சாகத்துடன் செயல்படும் நாள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

ரிஷபம்

சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும். ஊக்கத்தோடும், உற்சாகத் தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

மிதுனம்

பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.

கடகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். சிரித் துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும். தொலைபேசி மூலம் மனக்கசப்பு தரும் செய்திகள் வந்து சேரலாம்.

சிம்மம்

வழக்குகள் சாதகமாகும் நாள். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு.

கன்னி

அலைபேசி வழியில் ஆச்சரியப் படும் தகவல் வந்து சேரும் நாள் தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

துலாம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். வரவு திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முன்வருவீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சிஉண்டு.

விருச்சிகம்

பயணம் பலன் தரும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

தனுசு

விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உடல் நலனில் கவ னம் தேவை. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பணப் பொறுப்புகளில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

மகரம்

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். இடமாற்றத்தால் இனியமாற்றம் வந்து சேரும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.

கும்பம்

தொழில் வளர்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

மீனம்

நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.


Next Story