இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 24 April 2024 7:05 AM IST (Updated: 24 April 2024 10:49 AM IST)
t-max-icont-min-icon

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தசாவதார காட்சி. சென்னை கேசவ பெருமாள் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 11-ந்தேதி புதன்கிழமை.

திதி: பிரதமை திதி இரவு (60.00) நாள் முழுவதும்.

நட்சத்திரம்: சுவாதி நட்சத்திரம் இரவு (12.47)க்கு மேல் விசாகம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

நல்லநேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தசாவதார காட்சி. சென்னை கேசவ பெருமாள் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

முயற்சித்த காரியங்களில் வெற்றி கிட்டும் நாள், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்

நினைத்தது நிறைவேறும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

மிதுனம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும் நாள். கடன்சுமை குறையும். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கடகம்

அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போது மானதாக இருக்கும். பிரயாணத்தின் மூலம் பிரபலமானவர் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவால் சலுகைகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்

பொருளாதார முன்னேற்றம் நட்பால் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டு விலகி செல்வர்.

கன்னி

கொடுத்த தொகை குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

துலாம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். செலவுகளை குறைத்து சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.

விருச்சிகம்

வெற்றி தேவதை வீடு தேடி வரும் நாள். பணம் உங்களின் பையை நிரப்பும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.

தனுசு

யோகமான நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் உண்டு.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில் சம்பந்தமாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றம் கிடைக்கும்.

கும்பம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி திரும். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

மீனம்

வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காணவேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அமைதி கிடைக்க அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

சந்திராஷ்டமம்: சதயம் - பூரட்டாதி


Next Story