இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் சித்திரை மாதம் 16-ந்தேதி திங்கட்கிழமை.
திதி: பஞ்சமி திதி காலை(6.12)க்கு மேல் சஷ்டி திதி.
நட்சத்திரம்: பூராடம் நட்சத்திரம் இரவு(2.38)க்கு மேல் உத்ராடம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம் இரவு(2.38)க்கு மேல் மரணயோகம். கீழ்நோக்குநாள்.
சூலம்: கிழக்கு
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
நல்லநேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
சஷ்டி விரதம். சந்தோஷம் பெருக சண்முகநாதப் பெருமானை வழிபட வேண்டிய நாள்.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: நினைத்தது நிறைவேறும் நாள். நிச்சயித்த காரியத்திற்கு பணம் வந்து சேரும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.
ரிஷபம்: வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். குடும்பத்தினர்களின் செயல்பாடுகளால் வெறுப்பு உண்டாகும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
மிதுனம்: சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கடகம்: யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றால் மாலையில் அவதிப்படலாம்.
சிம்மம்: மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் விடுப்பு எடுத்ததை சரிசெய்ய வேலை பார்ப்பீர்கள்.
கன்னி: பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். உறவினர்களின் பகை மாறும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள்
துலாம்: நட்பால் நன்மை கிட்டும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு வெளியேறலாமா? என்று சிந்திப்பீர்கள்.
விருச்சிகம்: தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி அடையும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.
தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது.
மகரம்: இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்: நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். நண்பர்களுக்கு மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அலைபேசி அழைப்புகள் ஆச்சரியமளிக்கும்.
மீனம்: தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகம் சம்பந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: ரிஷபம்.