இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

திருமாலிருஞ்சோலை கள்ளழகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை.

திதி: துவிதியை திதி காலை(7.28) க்கு மேல் திருதியை.

நட்சத்திரம்: அனுஷம் நட்சத்திரம் இரவு (2.59)க்கு மேல் கேட்டை நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.

சூலம்: மேற்கு

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

நல்லநேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சென்னை கேசவ பெருமாள் சூரிய பிரபையில் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் பற்றிக் குறை கூறலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும்.

மிதுனம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம்

சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். மனக்குழப்பம் அகலும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.

சிம்மம்

கோரிக்கைகள் நிறைவேறக் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

கன்னி

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.

துலாம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பாராத வரவு உண்டு.

விருச்சிகம்

யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.

தனுசு

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.

மகரம்

விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் நாடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். எப்படி நடக்குமென்று நினைத்த காரியம் நல்ல விதமாக முடிவடையும். வழக்குகள் சாதகமாக முடியும்.

கும்பம்

பொருளாதார நிலை உயரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பெருமைகள் உண்டு. பணவரவு இருமடங்காக உயரும்.

மீனம்

வீடு வாங்கும் யோகம் ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு முக்கியப்புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மேஷம்


Next Story