இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ரெங்கமன்னார் ராப்பத்து உற்சவ சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-14 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திருதியை காலை 9.56 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: ஆயில்யம் நாளை காலை 6.05 மணி வரை பிறகு மகம்

யோகம்: மரண, அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி திருநாரையூர் பொள்ளப் பிள்ளையார், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர், உப்பூர வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ரெங்கமன்னார் ராப்பத்து உற்சவ சேவை. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

இன்றய ராசிபலன்

மேஷம்

வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து மகிழ்வீர்கள். வாகன பராமரிப்புச்செலவுகள் உண்டு. உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும்.

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். வாகனமாற்றுச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

மிதுனம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நூதனப்பொருட்களின் சேர்க்கை உண்டு. வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வழிபிறக்கும்.

கடகம்

முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உடல் நலனில் அக்கரை தேவை.

சிம்மம்

நட்பால் நலம் கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் இன்று மாற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் உண்டு. மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.

கன்னி

லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் வெற்றியைத் தேடித்தரும்.

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமண வாய்ப்பு கைகூடும்.

விருச்சிகம்

பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மறதியால் சில காரியங்களை செய்ய முடியாமல் போகலாம்.

தனுசு

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

மகரம்

தொல்லை தந்தவர்கள் விலகிச்செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும். பயணம் பலன் தரும்.

கும்பம்

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பழைய கடன்கள் வசூலாகும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

மீனம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்யோகத்தில் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.


Next Story