இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-22 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி இரவு 10.10 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: விசாகம் இரவு 7.58 மணி வரை பிறகு அனுஷம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

மேஷம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண்விரயமுண்டு. காரியத்தடை ஏற்படும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதி காரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

துலாம்

பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும்.

ரிஷபம்

பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

மிதுனம்

யோகமான நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகன பராமரிப்பில் அக்கறை செலுத்து வீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிரியமானவர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டு.

கடகம்

வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள், இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

விருச்சிகம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு முடிவெடுப்பீர்கள்.

தனுசு

மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

மகரம்

எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சியான செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

சிம்மம்

ஆர்வம் காட்டாத செயல் ஆதாயம்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும்.

கும்பம்

ஆதாயம் கிடைக்க அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கன்னி

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

மீனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குறைவாகப் பேசினாலும், குறை பேசாமல் இருப்பது நல்லது. மருத்துவ செலவு அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.

சந்திராஷ்டமம்: பகல் 1.10 வரை மீனம் பிறகு மேஷம்


Next Story