இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 14 Jan 2024 6:48 AM IST (Updated: 14 Jan 2024 1:07 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்

இன்றைய பஞ்சாங்கம்

சோப கிருது ஆண்டு: மார்கழி 29 (ஞாயிற்றுக்கிழமை)

சூரிய உதயம்: 6.34

திதி: பிற்பகல் 12.21வரை திரிதியை பின்பு சதுர்த்தி

நாம யோகம்:இன்று கலாஇ 10.25 வரை

நட்சத்திரம்; பிற்பகல் 02.44 வரை அவிட்டம் பின்பு சதயம்

கெளரி நல்ல நேரம்: காலை 10.30-11.30

மாலை: 01.30-02.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: கடகம்

குளிகை: மாலை 3.00 -4.30 வரை

எமகண்டம்: நண்பகல் 12.00-2.00 வரை

மேல்நோக்குநாள். சதுர்த்தி விரதம், வெற்றிகள் குவிய விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள்.

போகிப் பண்டிகை.

அதிர்ஷ்ட எண்கள் : 5,6,8.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

ரிஷபம்

கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். கொள்கை பிடிப்போடு செயல் படுவீர்கள். இல்லத்திற்கு தேவை யான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடியும்.

மிதுனம்

வருமான பற்றாக்குறை அக லும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உற வினர்களின் உதவி கிட்டும். சொத் துகள் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். நல்ல நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண் விரயம் உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக் காது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

சிம்மம்

கலகலப்பாகப்பேசி எதையும் சாதித்துக்கொள்ளும் நாள். கைகொடுத்து நண்பர்கள் காத் திருப்பர். அஞ்சல் வழியில் அனு கூலச் செய்தி உண்டு. அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள்.

கன்னி

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

துலாம்

சஞ்சலங்கள் அகலும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

விருச்சிகம்

பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பணவரவு எதிர்பார்த்ததைக் காட்டி லும் கூடுதலாக இருக்கும். உத்தியோ கத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

தனுசு

யோகமான நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர் பார்த்தபடி கிடைக்கலாம்.

மகரம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படி நடைபெறும் நாள். ஊக்கத் தோடும், உற்சாகத்தோடும் பணிபுரி வீர்கள். வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட் களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்

தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தி யோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்

விடிகாலையிலேயே வியக்கும் தகவல் கிடைக்கும் நாள். வீட் டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம்.

பொதுப்பலன்

அசுவதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். கும்ப ராசிக்காரர்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள்.


Next Story