இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

கோப்புப்படம் 

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-14 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திருதியை பிற்பகல் 3.31 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: திருவாதிரை மாலை 4.36 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம்: மரண, அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார், உப்பூர் வெயிலுகந்த விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர் தலங்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் உடன் புறப்பாடு. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம்: உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும்.

ரிஷபம்: திறமைகள் பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பிற இனத்தாரால் பெருமை சேரும். தொலைப்பேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றங்களை செய்வீர்கள்.

மிதுனம்: தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. அன்னிய தேச பயண வாய்ப்புகள் கைகூடும்

கடகம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. இனம்புரியாத கவலைகள் தோன்றலாம். பிரச்சினைகளை சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர். விரயங்கள் கூடும்.

சிம்மம்: புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் யோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

கன்னி: தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.

துலாம்: பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாக பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை தருவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்துசேரும்.

விருச்சிகம்: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு: தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. வருங்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலைகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும்.

மகரம்: வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

கும்பம்: போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் மாற்றப்படலாம்.

மீனம்: சகோதர சச்சரவுகள் அகலும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுநல ஈடுபாடு உண்டு. நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.


Next Story