இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

படம்: திருநள்ளார் சனீஸ்வர பகவான்

தினத்தந்தி 9 Dec 2023 3:19 AM GMT (Updated: 9 Dec 2023 3:33 AM GMT)

சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நன்று. திருப்பதி ஏழுமலையான் கதவால் மண்டபம் எழுந்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-23 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி இன்று விடியற்காலை 5.24 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: சித்திரை காலை 10.10 மணி வரை. பிறகு சுவாதி.

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாராதனம் உற்சவம். திருப்பதி ஏழுமலையான் கதவால் மண்டபம் எழுந்தருளல். திருநாகேஸ்வரம் நாகநாதர் திருவீதி உலா. சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நன்று. ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்:

மேஷம் : யோகமான நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான முயற்சி பலன் தரும். பொருளாதார நிலை உயரும்.

ரிஷபம் : குடும்பச்சுமை கூடும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுனம் : ஆதாயம் அதிகரிக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

கடகம் : மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதிற்கு இனிய தகவல் உண்டு. அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம் : துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

கன்னி : முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம் : வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். நட்பு வட்டம் விரிவடையும்.

விருச்சிகம் : பாக்கிகள் வசூலாகி பணவரவு திருப்தி தரும் நாள். கண்ணிய மிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். மாற்று மருத்துவத் தால் உடல்நலம் சீராகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

தனுசு : மதிநுட்பத்தால் மகத்தான காரிய மொன்றை செய்துமுடிக்கும் நாள். வெளிவட்டார தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும், வீடு, நிலம் சம்பந்தமான முடிவு எடுக்க முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

மகரம் : அலைபேசி மூலம் அனுகூல தகவல் வந்துசேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம் : கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு எளிதில் பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.

மீனம் : மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். சேமிப்பு கரையும். செல்வாக்குமிக்கவர்களை பகைத்து கொள்ள வேண்டாம். நண்பரை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரும்.

சந்திராஷ்டமம்: மீனம்


Next Story