இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று.
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-26 (செவ்வாய்க்கிழமை)
பிறை: அமாவாசை
திதி: சதுர்த்தசி இன்று காலை 6.22 மணி வரை. பிறகு அமாவாசை
நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 12.29 மணி வரை. பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை மற்றும் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள் :
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று தொடக்கம். சுவாமிமலை முருகன் தங்க பூமாலை சூடல். குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமருக்கு திருமஞ்சன சேவை. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்:
மேஷம் : யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம் : நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். கடிதம் மூலம் கனிந்த தகவல் வந்துசேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். யோகமான நாள்.
மிதுனம் : நம்பிக்கைக்குரியவர்கள் நாடி வந்து உதவும் நாள். முன் கோபத்தை குறைத்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கடகம் : வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம் : மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கன்னி : தேவைகள் பூர்த்தியாகி திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மனதிற்கு பிடித்தமான ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும்.
துலாம் : துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடைபெறும், பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும்.
விருச்சிகம் : புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரலாம். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு : விடாமுயற்சியால் வெற்றி கிட்டும் நாள். தொட்டது துலங்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.
மகரம் : செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பண தேவைகளை பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள்.
கும்பம் : வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மீனம் : குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்துகொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மேஷம்.