இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மதுரை மீனாட்சி கந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்தருளிய லீலை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது ஆண்டு, மார்கழி-19 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி இரவு 7.47 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 3.51 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். மதுரை மீனாட்சி கந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்தருளிய லீலை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் : சகோதரர்களால் நன்மை கிட்டும் நாள். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் விலகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
ரிஷபம் : அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம் : மனக்கசப்புகள் மாறும் நாள். நட்பு வட்டம் விரியும். தொழில் வியாபாரத்தில் இழந்த லாபத்தை பெறுவீர்கள். நூதன பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கடகம் : இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
சிம்மம் : குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். வாகனம் வகையில் பராமரிப்பு செலவு உண்டு. பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும்.
கன்னி : கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
துலாம் : அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்தழைப்பு செய்வர். உங்கள் பேச்சுத்திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம் : நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். சொத்து விற்பனையால் லாபம் கிட்டும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு : பாதியில் நின்ற பணி மீதியும் முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மகரம் : அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். ஆதாயம் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
கும்பம் : அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை.
மீனம் : திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள்.
சந்திராஷ்டமம்: பின் இரவு 4.14 வரை கும்பம்; பிறகு மீனம்.