இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

கடக ராசிக்காரர்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 27-ந் தேதி சனிக்கிழமை.

திதி: பிரதமை திதி இரவு(2.52) க்கு மேல் துவிதியை திதி.

நட்சத்திரம்: அவிட்டம் நட்சத்திரம் இரவு(10.17) க்கு மேல் சதயம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம் இரவு(10.17)க்கு மேல் அமிர்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

திருவள்ளூர் வீரராகவர் தேர் திருவிழா. திருநள்ளாறு ஸ்ரீசனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக அராதனை. திருநாங்கூர் பதினொரு கருட சேவை. மதுரை கூடலழகர் திருமஞ்சனம். திருமயம் ஸ்ரீஆண்டாள் சௌரி திருமஞ்சனம் தண்டியலில் சேவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாராதனம் உற்சவம்.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்: யோகமான நாள். நிகழ் கால தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

மிதுனம்: மதியத்திற்கு மேல் மனக்கசப்புகள் மாறும் நாள். திருமண முயற்சி கைகூடும். உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். கல்யாண முயற்சி கைகூடும்.

கடகம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் பிடிவாதங்களால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உறவினர் பகை உருவாகும்.

சிம்மம்: விரயங்கள் கூடும் நாள். வீட்டு தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

கன்னி: காரிய வெற்றி ஏற்படும் நாள். தகவல் வந்து சேரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

துலாம்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். வீடு கட்டும் பணி தொடரும். பயணம் பலன் தரும்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில் வெற்றிநடை போடும்.

தனுசு: வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

மகரம்: தடைகள் அகலும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்தித்து மகிழ்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ்பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கும்பம்: வருமானம் உயரும் நாள். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகும் நாள்.

மீனம்: போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். புதுமுயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணி உயர்வின் காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்று வேலை பார்க்க நேரிடும்.

சந்திராஷ்டமம்: காலை (11.03)வரை மிதுனம்; பிறகு கடகம்.


Next Story