வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா
x

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா 17-ந் தேதி நடக்கிறது

திருவாரூர்

வலங்கைமான்;

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான 17-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து அம்மனுக்குநேர்த்திகடன் செலுத்துவார்கள்.வருகிற 17-ந் தேதி ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி கோவில் அருகே உள்ள புனித குளத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதை முன்னிட்டு தெப்பக்குளம் தூய்மை செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணிகள் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெப்பத் திருவிழாவின் போது போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ்தக்கார் தமிழ்மணி நிர்வாகி சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.


Next Story