இ-பாஸ் வழங்குவதில் தளர்வு வேண்டும்!
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் பரவலும் அதிகமாகிறது. தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் மிகப்பெரும் பகுதி சென்னையில்தான் இருக்கிறது.
மார்ச் மாதத்திற்கு முன்பு வரை, சென்னையில் இருந்து தமிழகத்தின் எந்தவொரு நகரங்கள், கிராமங்களுக்குச் சென்றாலும், சென்னையில் இருந்து வருகிறீர்களா? வாருங்கள்... வாருங்கள்... என்று அன்போடு அங்குள்ள மக்கள் வரவேற்பது வழக்கம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சென்னையில் இருந்து வரப்போகிறார்களா? வேண்டாம்... வேண்டாம்... அங்கேயே இருக்கச் சொல்லுங்கள் என்று, மக்கள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகங்களே அலறுகின்றன.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் பரவலும் அதிகமாகிறது. தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் மிகப்பெரும் பகுதி சென்னையில்தான் இருக்கிறது. சென்னையில் மக்கள் அடர்த்தி மிக அதிகம், அந்த நெரிசல் காரணமாகத்தான் பரவுகிறது. இப்போதைய உடனடி தீர்வு என்னவென்றால், சென்னையில் உள்ள மக்கள் அடர்த்தியை இந்த நேரத்தில் குறைக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தமட்டில், பூர்வீக ஊர் சென்னை, சொந்த ஊர் சென்னை என்றநிலை வெகுக் குறைவானவர்களுக்கே இருக்கிறது. பெரும்பாலானவர்கள் மாவட்டங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக, தொழில் செய்வதற்காக, பிள்ளைகளின் படிப்புக்காக சென்னைக்கு வந்து குடியேறியவர்கள்.
இப்போது எல்லா பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருக் கின்றன. குடும்பத்தையாவது ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில், கொரோனா சரியாகும் வரை சொந்த ஊரில் குடியிருக்க சென்னையில் உள்ள மக்கள் நினைக்கிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக இ-பாஸ், எந்த மாவட்டத்தில் இருந்து புறப்படுகிறோமோ, அந்த மாவட்ட கலெக்டர், மாநகராட்சியாக இருந்தால் கமிஷனர், அதை வழங்கும் முறை முதலில் இருந்தது. பிறகு இந்தமுறை மாற்றப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கியது. இப்போது அந்த முறையும் மாற்றப்பட்டு, எந்த மாவட்டத்திற்கு செல்கிறார்களோ, அந்த மாவட்ட கலெக்டர் அனுமதியளித்தால் தான் வழங்கப்படுகிறது.
ஆனால், இப்போது சென்னையில் இருந்து மாவட்டங் களுக்கு செல்வதற்காக இ-பாஸ் விண்ணப்பம் தாக்கல் செய்பவர்களில், பெரும்பாலான விண்ணப்பங்கள் உடனடியாக மறுக்கப்படுகின்றன. மூன்றில் ஒரு பங்கு விண்ணப்பம் கூட ஏற்கப்படுவதில்லை. தொலைதூர மாவட்டங்கள் மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களில் குடியிருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், சென்னையில் இருந்து அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், எல்லோரும் இ-பாஸ் காட்டினால்தான் உள்ளே நுழைய முடியும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இவ்வளவுக்கும் வெளிமாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான படுக்கை வசதிகள் நிறைய காலியாக இருக்கின்றன. எனவே, அதை நினைத்தும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு பக்கம் இ-பாஸ் வாங்க இவ்வளவு கட்டுப்பாடு விதித்தாலும், மறுபக்கம் பணம் செலவழித்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து செல்பவர்கள், இ-பாஸ் வாங்காமலேயே அல்லது அதில் சில முறைகேடுகளை செய்து, மெயின் ரோட்டில் சென்று சோதனை நடத்தும் இடங்களில் ரோட்டை விட்டு விலகி, சற்று தூரம் கிராமங்கள் வழியாக, ஊரகச் சாலைகளில் சென்று, பின்னர் மெயின் ரோட்டுக்கு வந்து சொந்த ஊரை அடையும் சம்பவங்களும் நடக்கின்றன.
எனவே, இத்தகைய முறைகேடுகளுக்கு எல்லாம் இடம் கொடுக்காமல், இ-பாஸ் வழங்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி, மாவட்ட எல்லைகளில் இப்போது போல, கொரோனா பரிசோதனைகளை அதிக அளவில் நடத்தி, மக்களை அனுமதிக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சென்னையில் நெரிசலை குறைக்க வேண்டும் என்றால், கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றால், இதை செய்தால் தான் முடியும். திருமணம், மருத்துவ அவசர அவசியம், நெருங்கிய உறவினர்களின் இறப்பு என்பது போன்ற காரணங்களுக்காக மட்டும் இ-பாஸ் வழங்குவதோடு அல்லாமல், கொரோனா பரவும் நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்கள், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திருந்தால் அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும்.

Related Tags :
Next Story