மரப் பொருட்கள் செய்வதற்கு பயன்படும் 10 வகையான மரங்கள்


மரப் பொருட்கள் செய்வதற்கு பயன்படும் 10 வகையான மரங்கள்
x

இந்தியாவில் மரப் பொருட்கள் செய்வதற்கு பயன்படும் 10 வகையான மரங்களை பற்றி பார்ப்போம்...

வீட்டை அழகு படுத்தும் பொருட்களில் மரப்பொருட்களும் ஒன்று. கலை நயத்தை நுணுக்கமாக வெளிப்படுத்துவதில் மரங்களுக்கு இணையான ஒரு பொருள் இல்லை. வீடுகளை ஓவியங்கள் எப்படி அலங்கரிக்கிறதோ அப்படியே கலை நயமிக்க மரப் பொருட்களும் அலங்கரிக்கின்றன. காலமாற்றத்தால் மரத்திற்கு மாற்றாக உலோகங்கள் வந்தாலும், மரப்பொருட்களின் மதிப்பு இன்னமும் குறையாமல் இருக்கிறது.

மரங்களில் 2 வகை உள்ளன. கடினமான மரம்; மென்மையான மரம். இதில் எந்த வகை மரம் உறுதியான மற்றும் அழகான கலை நயம் மிக்க கதவு, நாற்காலி, கட்டில் போன்ற மரப் பொருட்களை உருவாக்க ஏற்றது என்பதைப் பற்றி பார்ப்போம். இந்தியாவில் 10 வகையான மரங்கள் கதவு, நாற்காலி, கட்டில் மற்றும் அலங்காரப் பொருட்கள் செய்ய பயன்படுகின்றன.

தேக்கு மரம் (Teak Wood)

தேக்கு, எளிதில் தீயில் கருகாத மற்றும் நீடித்து உழைக்கக் கூடிய மரம்; செல்லரிக்காது; சுருங்காது. பாலிஷ் செய்தால் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இயற்கையாகவே அதற்கொரு வரிகள் போன்ற வடிவம் உண்டு. கதவு, நாற்காலி, கட்டில் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற மரம். விலை உயர்ந்த மரங்களில் முதன்மையானது தேக்கு.

தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் 100 ஆண்டுகள் கடந்தும் வடிவம் மாறாமல் உறுதியாக இருக்க கூடியது. மத்திய மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் பெரும் அளவு கிடைக்கும்.

நூக்க மரம் (Rose Wood)

அழகான மற்றும் மிகவும் உறுதியான மரமாகும். நீண்ட காலம் வடிவம் மாறாமல் நிலைக்க கூடியது. இயற்கையாகவே இதன் மேற்பரப்பில் ஒரு கவர்ச்சிகரமான வடிவம் இருக்கும். இதன் காரணமாக இது இசைக்கருவிகள் செய்யப் பயன்படுத்தப் படுகிறது. இதன் உறுதித் தன்மை காரணமாக அலமாரிகள், மேசைகள், நாற்காலிகள் செய்யப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஒரிசா மாநிலங்களில் கிடைக்கும்.

சாடின் மரம் (Satin Wood)

சாடின் மரம் மிகவும் வலுவான மற்றும் வழுவழுப்பான மரமாகும். இதை பாலிஷ் செய்தால் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு பயன்படுகிறது. சாடின் மரம் பெரும்பாலும் கட்டிடத்தின் தரையாகப் பயன்படுத்தப் படுகிறது. குறைந்த அளவே பராமரிப்பு தேவைப்படுகிறது. தினமும் நீரால் கழுவ வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவ்வவ்போது பாலிஷ் செய்ய வேண்டும். நீண்ட நாட்களுக்கு அழகு கெடாமல் இருக்கும். மத்திய மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் பெரும் அளவு கிடைக்கும்.

சால் மரம் (Sal Wood )

சால் மரம் உறுதியான மற்றும் நீடித்து நிலைக்கக் கூடிய மரவகை ஆகும். பெரும்பாலும் இசைக்கருவிகள் மற்றும் தரை செய்ய பயன்படுத்தப் படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் மர விட்டங்கங்கள் செய்ய பயன்டுத்தப் படுகிறது. சால் மரத்தை செல் மற்றும் பூஞ்சை காளான் தாக்காது. உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், பீகார் மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலங்களில் அதிக அளவில் கிடைக்கும்.

சீசே மரம் (Sisso Wood )

சீசே மரம் உறுதியானது, நீடித்து நிலைக்காக கூடியது மற்றும் எளிதாக பதப்படுத்தக் கூடியது. மற்ற மரங்களை விட சீசே மரம் பாலீஷை நன்றாக ஏற்கும். அதன் காரணமாக மறைபொருட்கள் , தரை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் ரயில்களில் ஸ்லிப்பர்ஸ் (படுக்கைகள்) மற்றும் விளையாட்டுப் பொருட்கள் செய்வதற்கு பயன் படுத்தப் படுகிறது. பெங்கால், அஸ்ஸாம், உத்தர பிரதேஷ், மஹாராஷ்ரா, மற்றும் ஒரிசா மாநிலங்களில் அதிக அளவில் கிடைக்கும்.

மறந்தி மரம் (Marandi Wood )

மறந்தி மரம் மற்ற மரங்களை விட லேசானது. செல்லரிக்காது, மிருதுவான சமமான அமைப்பு கொண்டது. ஷூக்கள் வைக்கும் ரேக்குகள்,மேசை ட்ராயர்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. இம்மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் அழகாக காணப்படும். இது பெரும்பாலும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மகாகொனி மரம் (Mahagony Wood )

மகாகொனி மரம் நீரில் அலுக்காத மரமாகும். இதன் காரணமாக ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகள் உள்ள இடத்தில் இந்த மரத்தை பயன்படுத்துவார்கள். வீடுகளில் சமையல் அறை, குளியல் அறைகளில் பயன்படுத்தலாம். இந்த மரத்தில் உள்ள மிக சிறிய துளைகள் பாலிஷை நடராக உறிஞ்சி அடர்த்தியான வண்ணத்தை தரக் கூடியது. அலங்கார பொருட்கள், அலமாரிகள், வீடு புபயோகப் பொருட்கள் செய்ய பயன்படுத்தப் படுகிறது. உறுதியானது, நீடித்து நிலைக்காக கூடியது. இது பெங்கால், அஸ்ஸாம் மற்றும் கேரளாவில் மாநிலங்களில் பெரும் அளவில் கிடைக்கும்.

மல்பெரி மரம் (Mullberry Wood )

மல்பெரி மரம் கடினமான மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்ட மரமாகும். மற்ற மரங்களை போல் இல்லாமல் இது பல வண்ணங்களில் கிடைக்கக் கூடியது. கட்டிடங்களுக்கு தரை மற்றும் அலங்காரப் பொருட்கள் செய்யப் பயன்படுத்தப் படுகிறது. மர வேலிகள், மேசை ட்ராயர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள்

தியோடர் மரம் (Deodar Wood )

தியோடர் மரம் பழங்காலத்தில் கோயில்கள் கட்டுவதற்கும் , ரயில் பெட்டிகள் மாறும் ஸ்லீப்பர்கள் செய்யவதற்கும் பயப்படுத்தப் பட்டது. தியோடர் மரம் வலுவான, நீரில் அலுக்காத, செல்லரிக்காத மரமாகும். இது பாலிஷை நன்றாகா உறிஞ்சக் கூடியது. வீடுகளில் சமையல் அறை, குளியல் அறைகளில் மரப் பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தலாம். இது வண்ணங்களை உறிஞ்சக் கூடியது என்பதால் அலங்கார பொருட்கள், மரப் பலகையில் ஓவியம் வரைய பயன்படுத்தப் படுகிறது. இது பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேஷ் மாநிலங்களில் பெரும் அளவில் கிடைக்கும்.

பலா மரம் (Jack Wood )

பலா மரம் இயற்கையிலேயே மிக அழகான மரம். இசைக் கருவிகள் மற்றும் கலை நயம்மிக்கப் பொருட்கள் செய்வதற்கு பயன் படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் மிக எளிமையாக வேலை செய்யலாம். இது கேரளா, கர்நாடக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பெரும் அளவில் கிடைக்கும்.


Next Story