கவனம் செலுத்த வேண்டிய அஸ்திவார அமைப்புகள்
வாழ்க்கைக்கான அடிப்படையாக வீடு இருப்பதுபோல வீட்டுக்கு அடிப்படையாக அஸ்திவாரம் அமைகிறது.
வாழ்க்கைக்கான அடிப்படையாக வீடு இருப்பதுபோல வீட்டுக்கு அடிப்படையாக அஸ்திவாரம் அமைகிறது. ஒட்டுமொத்த கட்டமைப்பின் எடை மற்றும் வடிவாக்கம் ஆகியவற்றை பூமிக்கு அடியில் கண்ணுக்கு தெரியாமல் இருந்து அஸ்திவாரங்கள் பாதுகாக்கின்றன. அனைத்து விதமான கட்டுமான அமைப்புகளின் ஆரம்ப கட்ட பணியானது அஸ்திவாரம் அமைப்பதாகத்தான் இருக்கும். அதன் தரம் எப்படி உள்ளது என்பதன் அடிப்படையில் ஒரு கட்டமைப்பின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சிதமான மற்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கேற்ப அஸ்திவாரம் அமைக்கும்போது கால மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அதன் நீடித்து நிற்கும் தன்மை அமையும்.
பழைய கால அஸ்திவாரம்
இப்போது இருக்கக்கூடிய அறிவியல் பூர்வமான மண் பரிசோதனைகள் இல்லாத பழைய காலத்திலும் உறுதியான அஸ்திவார அமைப்புகள் வடிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்காக சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது இருப்பது போன்ற கடைக்கால் அமைப்பதற்கான பொறியியல் வல்லுனர்கள் அன்று இல்லை. இருந்தாலும் காலத்தை வென்று நிற்கக்கூடிய கட்டமைப்புகளை அவர்களால் உருவாக்க இயன்றது. அதற்கு காரணம் அன்றைய சூழலில் எளிதாக கிடைத்த இயற்கையான பொருட்களை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினார்கள்.
வலுவேற்றிய கான்கிரீட்
இப்போது அமைக்கப்படும் அஸ்திவார கட்டுமானத்தை பொறுத்தவரையில் தரமான இரும்புக்கம்பியுடன் கச்சிதமான கான்கிரீட் கலக்கப்பட்டு அமைக்கப்படுகிறது. அஸ்திவாரத்திற்கான அடிப்படை கட்டுமான பொருட்களாக இரும்புக்கம்பி மற்றும் கான்கிரீட் ஆகியவற்றை மட்டும் பிரதான மூலப்பொருளாக கொண்டு செங்குத்தான பில்லர்கள் மற்றும் கிடைமட்ட பீம்கள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் அத்தகைய வலுவேற்றிய கான்கிரீட் அஸ்திவாரம் மீது ஒரு கட்டமைப்பு உயரமாக எழுந்து நிற்கிறது.
பாதிப்புகள்
ஆர்.சி.சி எனப்படும் வலுவேற்றிய கான்கிரீட் அமைப்பானது கச்சிதமாக இருக்கும் பட்சத்தில் துரு அல்லது விரிசல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். கான்கிரீட் கலவையில் இரும்பு கம்பிகள் காரத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதன் காரணமாக தண்ணீர் படிந்தாலும்கூட துரு பிடிப்பது போன்ற பாதிப்புகள் வராமல் இருக்கவேண்டும். ஆனால் எப்படியோ துரு ஏற்பட்டு விடுவது நடைமுறையில் கண்டறியப்பட்டுள்ளது. நம்மால் பயன்படுத்தப்படும் சிமெண்டில் ‘குளோரைடு’ சம்பந்தமான உப்புக்களின் பாதிப்புக்கள் இருந்தால், ஈரப்பதம் அதில் படியக்கூடிய தருணத்தில் இரும்பின் மேற்பரப்பில் அது துருவாக மாற்றமடைகிறது. அதனால் இரும்பு கம்பிகள் அளவில் பெரியதாக மாறுவதால் கான்கிரீட்டில் விரிசல்கள் ஏற்படுகின்றன.
காற்றின் பாதிப்பு
காற்றில் பெருமளவில் கலந்துள்ள கரியமில வாயு உள்ளிட்ட மற்ற நச்சு வாயுக்களும்கூட அஸ்திவார அமைப்பில் பாதிப்பை உண்டாக்குன்றன. கரியமில வாயுவானது கான்கிரீட்டில் ஏற்படக்கூடிய விரிசல்களில் நுழையும்போது ‘கார்பானிக்’ அமிலமாக மாறி இரும்பு கம்பியை அரிப்பதற்கான காரணியாக அமைகிறது.
தவிர்க்கும் வழி
மேற்கண்ட ரசாயன பாதிப்புகளை தவிர்க்க வேண்டுமானால் இரும்பு கம்பிகளை சுற்றி கச்சிதமான அளவில் கான்கிரீட் கலவையை அமைக்க வேண்டும். மேலும், அஸ்திவார கட்டமைப்பு உள்ளிட்ட பிற கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரானது நன்னீராக இருக்கவேண்டும். தண்ணீரில் உப்புத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால் பாதிப்புகள் உண்டாக அதுவே காரணமாக அமைந்துவிடும். மேலும் கட்டுமான பணிகள் முடித்து பிறகு அதன்மேல் அமைக்கப்படும் கட்டுமானத்திலிருந்து வழிந்து வரக்கூடிய கழிவு நீரானது அஸ்திவார அமைப்புக்குள் புகுந்துவிடாமல் தடுப்பை அமைக்க வேண்டும்.

Next Story