அறைகளை அலங்கரிக்கும் அழகிய சர விளக்குகள்


அறைகளை அலங்கரிக்கும் அழகிய சர விளக்குகள்
x
தினத்தந்தி 21 Jan 2017 12:15 AM GMT (Updated: 20 Jan 2017 1:22 PM GMT)

வீடுகளில் பொருத்தப்படும் ‘சாண்டலியர்கள்’ சர விளக்குகள் முக்கியமான இடத்தை பெறுகின்றன.

வீடுகளில் பொருத்தப்படும் ‘சாண்டலியர்கள்’ சர விளக்குகள் முக்கியமான இடத்தை பெறுகின்றன. அறையின் தோற்றத்தை வேறொரு பரிணாமத்தில் எடுத்துக்காட்டக்கூடிய தன்மை பெற்றவை. இரவில் ஒளிதரும் விளக்குகளால் பளபளப்பாக ஒளிரக்கூடியதாகவும்,  பகல் நேரங்களில் அவை மாறுபட்ட அழகிய தோற்றத்துடன் கண்களை கவருவதாக இருக்கின்றன. அளவில் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும் வீட்டின் எந்த எந்த பகுதியையும் கம்பீரமான அழகுடன் எடுத்துக்காட்டக்கூடிய ‘சாண்டலியர்கள்’ பல்வேறு வகையான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வகை சர விளக்குகள் இறக்குமதியும் செய்யப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றன.

மின் பயனீட்டு அளவு

தேர்ந்தெடுக்கப்படும் அறை அல்லது ஹாலின் நீள அகலங்களை பெருக்கி வரும் விடையை 1.5 என்ற எண்ணோடு பெருக்க வேண்டும். வரக்கூடிய விடை எதுவோ அவ்வளவு ‘வாட்’ பல்புகள் கொண்ட ‘சாண்டலியர்’ அந்த அறைக்கு பொருத்தமாக இருக்கும்.

அதாவது ‘ஹால்’ 10அடி அகலம் 16அடி நீளம் என்றால் அதன் மொத்த அளவு 160 சதுர அடியாகும். அத்தோடு 1.5–ஐ பெருக்கினால் 240 வருகிறது. எனவே 40 வாட்டு மின்சக்தி கொண்ட 6 பல்புகள் கொண்ட ‘சாண்டலியர்’ சரியான தேர்வாக இருக்கும். மேலும், தேவைப்பட்ட சமயங்களில் வெளிச்சத்தின் அளவை அதிகப்படுத்தவும் குறைத்துக்கொள்ளவும் ‘ஸ்விட்ச்’ அமைப்புகள் இருப்பதை தேர்வு செய்வதும் முக்கியம்.

அளவு காணும் முறை

சரவிளக்கு அமைக்கப்படும் இடத்தின் நீளஅகலங்களை கூட்டினால் வரக்கூடிய விடை எதுவோ அதை ‘இன்ச்’ எனப்படும் அங்குலமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது 10அடி அகலமும் 16 அடி நீளமும் கொண்ட ‘ஹாலின்’ நீள அகலங்களை கூட்டினால் 26 வருகிறது. எனவே 26 அங்குலம் குறுக்களவு கொண்ட சர விளக்கு அதற்கு பொருத்தமாக இருக்கும்.

பொருத்தும் உயரம்

தரையிலிருந்து 7 அல்லது 8 அடி உயரத்தில் சரவிளக்கின் அடிப்பாகம் இருப்பது போல பொருத்தப்படவேண்டும். அதன் மூலம் மின்சார விளக்குகள் எரியும் போது வெளிப்படும் வெப்பத்தால் நமது தலைப்பகுதி பாதிக்கப்படாமல் இருக்கும்.


Next Story