கட்டுமானத்துறையில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்கள்
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு தொடங்கும்போதும் அந்த வருடத்தில் கட்டுமான துறையில் புரட்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றி வல்லுனர்களால் பெரிதும் பேசப்படும்.

அந்தவகையில் இவ்வருடத்தில் அறிமுகமாகும் தொழில்நுட்ப அம்சங்கள் என்னவாக இருக்கும்..? என்பது பற்றி கட்டிடவியல் வல்லுனர்கள் பட்டியலிட்டுள்ளனர். ‘கேபிள் லெஸ் எலிவேட்டர்’, ‘ஸ்மார்ட் காங்கிரீட்’, ‘பிளை ட்ரோன்’, ‘சோலார் பெயிண்டு’, ‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’, ‘வர்ச்சுவல் ரியலிட்டி ஹோம் டிசைன்’, 3டி கான்கிரீட் என்று பல தரப்பட்ட புதிய அணுகுமுறைகளாக அவை அறிமுகமாக இருக்கின்றன. அத்தகைய தொழில்நுட்பங்களில் சிலவற்றை இங்கே காண்போம்.
‘ஸ்மார்ட் கான்கிரீட்’
நமது கைபேசிகளில் ‘ஸ்மார்ட் போன்’ வகைகள் இருப்பதுபோல, கான்கிரீட்டிலும் ‘ஸ்மார்ட்’ உண்டு. அதாவது மேற்பரப்பில் உள்ள அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி ஈரமற்ற நிலையில் இருக்கும் தன்மை பெற்ற கான்கிரீட் இதுவாகும். இது ‘அப்சார்பன்ட் கான்கிரீட்’ என்றும் சொல்லப்படுகிறது. மழை அல்லது வேறு காரணங்களால் தண்ணீர் தேங்கும்போது அதை உடனே அசுர வேகத்தில் உறிஞ்சிக்கொள்ளும் அதிசய தொழில்நுட்பமாக இது உள்ளது.
‘சோலார் பெயிண்டு’
தடையில்லாத மின்சார உபயோகத்துக்கு வீடுகளில் ‘சோலார் பேனல்கள்’ மூலம் மின்சார உற்பத்தி செய்து பயன்படுத்துவது பிரபலமான தொழில்நுட்பமாக இருந்து வருகிறது. ‘சோலார் பேனல்களை’ அமைப்பது செலவு பிடிக்கக்கூடியதாகவும், குறிப்பிட்ட இடம் தேவை என்பதாலும் அனைவராலும் அவற்றை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. அந்த சிக்கலை தீர்ப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பமே ‘சோலார் பெயிண்டு’ ஆகும். அதில் அடங்கியுள்ள முக்கிய பொருள்கள் ‘ஜிங்க்’ எனப்படும் துத்தநாகம் மற்றும் ‘பாஸ்பரஸ்’ ஆகியவையாகும். சூரிய வெளிச்சம் படக்கூடிய சுவர்களில் அவை பூசப்படும்போது, சூரிய வெப்பத்தை பல மடங்கு அதிகமாக்கி மின்சக்தியாக பேட்டரிகளில் சேமித்து வைத்து வீட்டு உபயோகத்துக்கு பயன்படுகிறது.
‘கேபிள் லெஸ் எலிவேட்டர்’
ஏற்கெனவே வாக்குவம் (வெற்றிடம்) முறையில் இயங்கக்கூடிய ‘குட்டி லிப்டுகள்’ பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் மின் காந்த சக்தி மூலமாக இயங்கக்கூடிய லிப்ட் வகைகளும் அறிமுகமாக இருக்கின்றன. இரண்டு வகையான லிப்ட்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும் சில தொழில்நுட்ப ரீதியான வரையறைகள் மாறுபடலாம். இடம் அல்லது விலைகளில் வித்தியாசம் இருக்கலாம்.
‘பிளை ட்ரோன்’
ஆளில்லா குட்டி விமானங்களை ரகசிய வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட நிலை இன்று மாறிவிட்டது. பல்வேறு தரப்பட்ட சிக்கலான கோணங்களில் ஒரு பொருளை மாறுபட்ட பார்வை செய்யும் கருவியாக ‘ட்ரோன்கள்’ எனப்படும் பறக்கும் குட்டி விமானங்கள் இன்று பயன்படுகின்றன. முக்கியமாக கட்டுமான பணிகள் பத்துக்கும் மேற்பட்ட தளங்கள் கொண்டதாக இருக்கும்போது அதை உயரத்திலிருந்து கண்காணிக்க பெரிதும் உபயோகப்படுகின்றன.
‘விர்ச்சுவல் ரியலிட்டி ஹோம் டிசைன்’
அட்டகாசமான கண்கட்டு வித்தை என்று இதை சொன்னால் மிகையில்லை. காரணம் கட்டப்படாத நமது வீட்டை சுற்றிப்பார்க்க இந்த தொழில் நுட்பம் உதவி செய்கிறது. அதாவது கண்களோடு பொருத்திக்கொள்ளும் வகையில் இருக்கும் சிறு அளவு திரை கொண்ட இக்கருவியில் நமது கட்டப்படாத வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொரு அறையாக பார்த்து வேண்டிய பொருட்களை அமைத்துக்கொள்ள முடியும். மனதுக்கு இதமாக உள்ள பெயிண்டு வகைகளை பூசவும் இயலும். பர்னிச்சர்களை கச்சிதமாக வேண்டிய இடங்களில் அமைத்துக்கொள்ளலாம்.
‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’
ஒரு வகையில் இன்டர்லாக் கற்களின் மறு வடிவமாக இதை சொல்லலாம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் இதில் கற்களை இணைக்க சிமெண்டு வேண்டியதில்லை. ஒவ்வொரு கல்லிலும் இருக்கும் விஷேச பசையானது கற்களை கச்சிதமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டச்செய்கிறது. அதனால் வேலை சுலபமாக முடிகிறது. குறிப்பாக கட்டுமான அமைப்புகளுக்கு இடையில் வரக்கூடிய குறுக்கு சுவர்களை அமைக்க இவ்வகை ‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’ அருமையான தேர்வாக இருக்கும்.

Next Story