கவனிக்க வேண்டிய ஆழ்குழாய் கிணறு மோட்டார் தொழில்நுட்பம்
கட்டுமான அமைப்புகளுக்கும், வீடுகளுக்கும் அவசியமான தண்ணீர் தேவைகளுக்கு, ஆழ்குழாய் கிணறு அமைத்து கொள்வது நடைமுறை.
கட்டுமான அமைப்புகளுக்கும், வீடுகளுக்கும் அவசியமான தண்ணீர் தேவைகளுக்கு, ஆழ்குழாய் கிணறு அமைத்து கொள்வது நடைமுறை. அவ்வாறு குழாய் கிணறு அமைக்கும் போது ‘சப்மெர்சிபிள்’ எனப்படும் நீர்மூழ்கி மோட்டார்கள் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய மின்மோட்டார்களை தேர்ந்தெடுக்கும்போது, தண்ணீர் உட்புகும் வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது. அதன் வாயிலாக மின்கசிவால் ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும்.
வெப்பத்தை தாங்கும்
அதிகப்படியான வெப்பத்தை தாக்கு பிடிக்கும் மோட்டார்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. கூடுதலாக, வெப்பம் அதிகமாகி விட்டது என்பதை உணர்த்தக்கூடிய அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களும் இப்போது கிடைக்கின்றன. அத்தகைய மின்மோட்டார்களை பயன்படுத்தினால், அடிக்கடி பழுது ஆவது தவிர்க்கப்படும்.
வெப்பத்தை உணரும்
இன்னும் ஒருபடி மேலாக, வெப்பத்தை தாமாக உணர்ந்து மின் இணைப்பையும் துண்டித்து விடும் வகையிலான மோட்டார்களும் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை பொருத்துவதும் பாதுகாப்பானது.
விரயங்கள் இல்லை
தண்ணீர் தொட்டி நிறைந்ததும் மின்மோட்டார் தாமாகவே நின்று விடும் தொழில் நுட்பமும் இப்போது இருக்கிறது. இதற்காக தொடக்கத்தில் செய்யப்படும் செலவு தவிர வேறு செலவுகள் இல்லை. ஆனால், அந்த செலவு மூலமாக தண்ணீர் விரயம், அதிகமான மின் பயன்பாடு ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

Next Story