குறைந்த விலை வீடுகளை ஊக்கப்படுத்தும் பட்ஜெட்
2017–18–ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் குறைந்த விலை வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
2017–18–ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் குறைந்த விலை வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது குறைந்த விலை வீடுகளைக் கட்டும் பில்டர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு பில்டர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைந்த விலை வீடுகளுக்கான பரப்பளவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வீடுகளின் அளவில் மாற்றம்
கடந்த நிதியாண்டில் குறைந்த விலை வீடுகளின் ‘பில்ட்–அப் ஏரியா’ பரப்பானது நான்கு மெட்ரோ நகரங்களில் 30 சதுர மீட்டர் அளவுக்கு உட்பட்டும் நாட்டின் பிற பகுதிகளில் 60 சதுர மீட்டர் அளவுக்கு உட்பட்டும் இருக்கவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டில் ‘பில்ட்–அப் ஏரியா’ என்பதற்கு பதிலாக ‘கார்பெட் ஏரியா’ என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே குறைந்த விலை வீடுகளின் பரப்பளவை கொஞ்சம் கூடுதலாக்கிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 சதுர மீட்டர் ‘கார்பெட் ஏரியா’ என்ற விதிமுறை நான்கு மெட்ரோ நகரங்களை ஒட்டியுள்ள புறநகர்ப்பகுதிகளுக்கும் பொருந்தும்.
கால வரம்பு நீட்டிப்பு
குறைந்த விலை வீடுகளுக்கான சலுகைகளைப் பெற, அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கி மூன்றாண்டு காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது அந்த கால அளவு ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரிவிதிப்பு முறையில் மாற்றம்
தற்போது கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு தயார்நிலையில் இருக்கும் வீடுகளுக்கு பில்டர்கள் வாடகை வருவாய்க்கான வரியை செலுத்தி வருகின்றனர். இந்த வரிவிதிப்பு முறையில் வீடுகள் விற்பனை ஆகவில்லை என்றால் பில்டர்ளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அந்த நஷ்டத்தை தவிர்ப்பதற்கு பட்ஜெட்டில் வகைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடம் முடிந்தபிறகு பில்டர்கள் வரி செலுத்தினால் போதுமானது.
மூலதன லாபத்திற்கான கால அளவு
நிலம் மற்றும் கட்டுமானங்களுக்கான மூலதன லாப வரியிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அசையா சொத்திலிருந்து லாபம் பெறுவதற்கான அதிகபட்ச கால அளவு 3 ஆண்டுகளாக இருந்தது. தற்போது அந்த கால அளவு 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் 1981–ம் ஆண்டிற்குப் பதிலாக 2001–ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு விலைக்குறியீட்டெண் மதிப்பிடப்படும். இந்த நடவடிக்கைகளின் காரணமாக மூலதன லாப வரியின் அளவு குறைந்து சொத்து விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும். மேலும் மூலதன லாபத்தை முதலீடு செய்வதை ஊக்குவிக்கும்வகையில் வரிவிலக்கு அளிப்பதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
கட்டுமான பணிகள் தொடர்பாக கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது, கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே மூலதன லாபத்திற்கான வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ரியல் எஸ்டேட் துறை தேக்க நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்ட சலுகைகள் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்வகையில் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.
பணமதிப்பு நீக்கத்தால் வீடுகளின் விலை குறைவு
பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக 2016–17 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சொத்து விற்பனையின்போது வரி ஏய்ப்பின் காரணமாக கருப்புப்பணம் அதிகளவில் புழக்கத்தில் இருந்துவந்தது. கருப்புப் பணத்தை தடுப்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகளாலும், இணைய வழி பண பரிமாற்றங்கள் அதிகரித்ததாலும் சொத்து விற்பனையில் வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வீடுகளின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விற்பனை விலை மேலும் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
வீடுகளின் விலை குறைந்திருப்பதன் காரணமாக மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குறைவான விலையில் வீடு வாங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் வேலை பார்ப்பதற்காக இடம்பெயர்ந்து வாழ்பவர்களின் வாடகைச் சுமையும் குறைந்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story