உறங்கும் அறைக்கு அவசியமான வாஸ்து குறிப்புகள்


உறங்கும் அறைக்கு அவசியமான வாஸ்து குறிப்புகள்
x
தினத்தந்தி 10 Feb 2017 8:15 PM GMT (Updated: 10 Feb 2017 10:46 AM GMT)

நிம்மதியான உறக்கம் என்பது அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற நிலையில் உறங்கும் அறையை அமைக்கும் விதம் பற்றி வாஸ்து விரிவாகவே குறிப்பிடுகிறது.

நிம்மதியான உறக்கம் என்பது அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற நிலையில் உறங்கும் அறையை அமைக்கும் விதம் பற்றி வாஸ்து விரிவாகவே குறிப்பிடுகிறது. ‘மாஸ்டர் பெட்ரூம்’ உள்ளிட்ட வீடுகளில் இருக்கும் படுக்கை அறைகளை திட்டமிடுவதிலும், கச்சிதமாக அமைத்துக்கொள்வதிலும் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு திசைகளில் தலை சாய்த்து வைத்து ஓய்வெடுப்பதும், படுக்கையை வேண்டியபடி  அமைத்துக்கொள்வதும் ஒருவருடைய விருப்பமாக இருந்தாலும், அதில் கவனம் செலுத்தவேண்டிய அம்சங்களும் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

உறங்கும் திசையானது நமது அன்றாட வாழ்க்கையின் வெற்றி வாய்ப்புகளை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தது என்று வாஸ்து குறிப்பிடுவதை வெறும் நம்பிக்கை சார்ந்த வி‌ஷயமாக மட்டும் பார்க்க இயலாது. அதில் அறிவியலும் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமைதியான உறக்கத்துக்கு பிறகு ஒருவரது செயல்திறன்கள் சிறப்பாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்வதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

படுக்கை அறையில் கடைப்பிடிக்கப்படும் வாஸ்து ஆழ்ந்த உறக்கத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான அம்சமாகவும் இருக்கிறது. அறைகளை கட்டமைப்பதிலும், வரைபடம் தயாரிப்பதிலும் பல்வேறு காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. படுக்கை அறை அமைப்புகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அடிப்படை வி‌ஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

• படுக்கை அறை சுவர்களில் இனிமை தரும் வண்ணங்கள் பூசப்பட வேண்டும்.

• படுக்கை அறையின் அனைத்து கட்டமைப்புகளிலும் வாஸ்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

• மரச்சாமான்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றை தெற்கு மற்றும் மேற்கு திசைகள் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.

• மன அமைதியுடன் உறங்க ஏதுவாக மரத்தாலான படுக்கைகள் இருப்பதுதான் சிறந்தது.

• உறங்கும் அறைகளில் தெய்வ சிலைகள் வைக்கப்படுவது தவிர்க்க
வேண்டும்.

• படுக்கை அறையில் பூஜை செய்வதற்கான ‘ஷெல்ப்’ வைப்பதும் தவறான முறையாகும்.

• வாஸ்து சாஸ்திர ரீதியாக சதுரம் மற்றும் செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்ட படுக்கை அறைகள்தான் சிறந்தவையாகும்.

• படுக்கை அறையில் வண்ண மீன் தொட்டிகள் அல்லது
அழகுச்செடிகள் போன்ற தாவர வகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

• பொதுவான மருத்துவ குறிப்புகளின்படி, படுக்கை அறையில் மென்மையான, இனிமையான ஒளியும், இசையும் இருப்பதை வாஸ்து ஏற்றுக்கொள்கிறது.

• படுக்கை அறைக்கான ஜன்னல் அல்லது கதவு ஆகியவற்றை அமைக்கும்போது உச்ச திசைகளை தேர்ந்தெடுத்து பொருத்துவது முக்கியம். அதன் காரணமாக நேர்மறை ஆற்றல் சுலபமாக அறைகளில் பரவுவதற்கு ஏதுவாக இருக்கும்.

Next Story