தரை தளத்தை பராமரிக்க உதவும் நவீன முறைகள்
சின்ன பட்ஜெட் வீடாக இருந்தாலும் பெரிய பட்ஜெட் வீடாக இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில்தான் கட்டுமான பணிகள் செய்து முடிக்கப்படுகின்றன.
சின்ன பட்ஜெட் வீடாக இருந்தாலும் பெரிய பட்ஜெட் வீடாக இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில்தான் கட்டுமான பணிகள் செய்து முடிக்கப்படுகின்றன. மேலும் வீடுகள் கட்டமைப்பின்போது அனைவரது ஆசைகள் மற்றும் நீண்ட நாள் கனவுகளின்படி ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றின் கட்டுமான பணிகள் நடந்து முடித்து நல்லதொரு நாளில் கிரக பிரவேசம் நடத்தி முடித்து குடியேறுவது வழக்கம்.
தரைத்தளம் கவனம்
ஆனால், அத்துடன் வீடு சம்பந்தமான வேலைகள் முடிந்து விடுகிறதா..? என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். காரணம் வீடுகளை கட்டமைப்பது ஒரு வருடத்திற்கான வேலை என்றால் அதன் பாராமரிப்பு என்பது அதன் ஆயுளுக்குமான வேலையாக இருக்கும்.
அந்த வகையில் மொத்த வீட்டையும் பராமரிக்க பலரும் பல்வேறு வழிகளை கையாள்வது வழக்கம். அவற்றில் முக்கியமாக தரைத்தள பராமரிப்பு என்பது கவனிக்க வேண்டியதாக இருக்கும். அதிலும் ‘டைல்ஸ்’ தரைத்தளம் அமைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
‘டைல்ஸ்’ வகைகள்
பொதுவாக ‘மார்பிள்ஸ்’ வகை தரைத்தள அமைப்பை விடவும் ‘டைல்ஸ்’ வகை தரைத்தள அமைப்பானது சற்றே குறைந்த ‘பட்ஜெட்’ கொண்டதாக இருக்கும். மேலும், அவை பல வகையான ‘டிசைன்களில்’ கிடைக்கும் என்பது அவற்றின் தேவையை அதிகமாக்கி இருக்கிறது. ‘செராமிக் டைல்ஸ்’ வகைகள் மேற்கண்டவைகளை விடவும் இன்னும் சற்று விலை குறைவாக இருக்கும் காரணத்தால் அதிகமான பயன்பாட்டில் உள்ளன.
ரசாயன பொருட்கள்
பொதுவாக தரைத்தள அமைப்பு மற்றும் சுவர்ப்பரப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ‘டைல்ஸ்’ வகைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்து பதிக்கப்படும்போது அவற்றிற்கு இடையில் சிறிய இடைவெளி உண்டாவதை தவிர்க்க இயலாது. அந்த இடைவெளிகள் நாளடைவில் அழுக்கு படிந்து அழகற்ற தோற்றத்துடன் காணப்படும். அதை சுத்தம் செய்வதற்கு ரசயான மருந்து பொருட்களை உபயோகம் செய்ய வேண்டியதாக இருக்கும்.
‘பில்லர் மெட்டீரியல்’
இரண்டு ‘டைல்ஸ்களுக்கு’ மத்தியில் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதற்கு விசேஷமான ‘பில்லர் மெட்டீரியல்’ வகைகள் இப்போது வழக்கத்தில் இருக்கின்றன. ‘சிங்கிள் காம்போனன்ட் டைல் ஜாயிண்ட் பில்லர்’, ‘த்ரீ காம்போனன்ட் டைல் ஜாயிண்ட் பில்லர்’ மற்றும் ‘பாஸ்ட் செட்டிங் டைல் மோர்ட்டர்’ ஆகியவை தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தி தரைத்தளங்கள் அமைக்கப்படும்போது இடைவெளிகள் மறைந்து விடுவதோடு, ரசாயன பொருட்களை பயன்படுத்தி தரைகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
‘டைல்ஸ் பரிசோதனை’
இப்போது மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்கள் ‘டைல்ஸ்’ வகைகளை தயாரித்து வழங்குகின்றன. ‘டைல்ஸ்களில்’ பல விதங்கள் இருப்பதால் தரமான வகை எது என்பதை சிறிய பரிசோதனை மூலம் நாமே கண்டுபிடிக்கலாம். அதற்காக பல வருட அனுபவம் உள்ளவர்கள் சில குறிப்புகளை தருகிறார்கள்.
அதாவது நல்ல தரமான ‘டைல்ஸ்’ வகையில் ஒன்றை எடுத்து எடை போட்டு பார்க்கவேண்டும். பிறகு அதையே தண்ணீரில் சிறிது நேரம் மூழ்க வைத்த பிறகு எடை போடவேண்டும். அந்த இரண்டு நிலைகளிலும் எடை மாறாமல் ஒரே அளவாக இருப்பது தரமான ‘டைல்ஸ்’ ஆக கருதப்படும்.
‘மார்பிள்’ வகைகள்
இயற்கையாக கிடைக்கும் ஒருவகை சுண்ணாம்பு கல் வகை ‘மார்பிள்’ ஆகும். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பூமியில் பல அடுக்குகளில் பாறை படிமங்களாக அவை கிடைக்கின்றன. ‘டைல்ஸைவிட’ விலை கூடுதலாக இருக்கும் அவற்றில் வெளிநாட்டு ‘மார்பிள்’ வகைகளும் கிடைக்கின்றன. அவற்றில் துளைகள் உள்ளவற்றை செயற்கையான பசை வைத்து அடைத்து ‘செகண்ட் குவாலிட்டியாக’ சந்தையில் விற்கப்படுகின்றன. அதனால் அவ்வகை ‘மார்பிள்’ வகைகளை சரியாக கண்டறிந்து பயன்படுத்தும்படி கட்டுமான வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

Next Story