மிதியடி அலங்காரம்..


மிதியடி அலங்காரம்..
x
தினத்தந்தி 11 Feb 2017 1:00 AM IST (Updated: 10 Feb 2017 4:23 PM IST)
t-max-icont-min-icon

மிதியடிகள்தான் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தை முதலில் ஈர்க்கின்றன. வீட்டில் செய்யப்பட்டிருக்கும் உள் அலங்காரங்கள் அனைத்தும் அதற்குப் பிறகுதான் பார்வையில் படுகின்றன.

மிதியடிகள்தான் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தை முதலில் ஈர்க்கின்றன. வீட்டில் செய்யப்பட்டிருக்கும் உள் அலங்காரங்கள் அனைத்தும் அதற்குப் பிறகுதான் பார்வையில் படுகின்றன. எனவே மிதியடிகளை கவனமாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

தரைக்கு ஏற்ற வண்ணம்

மிதியடிகளின் நிறமானது தரையில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட், மார்பிள் அல்லது டைல்ஸ் ஆகியவற்றின் நிறத்திலிருந்து தனித்து தெரியும்வகையில் அமைய வேண்டும். தரையின் நிறம் மங்கலாக இருந்தால் மிதியடிகளின் நிறம் அடர்த்தியான நிறத்தில் இருக்க வேண்டும். அதைப்போல தரையின் நிறம் அடர்த்தியாக இருந்தால் மிதியடியின் நிறம் அடர்த்தி குறைவாக இருக்க வேண்டும்.

இரண்டு மிதியடிகள்

வீட்டின் வாசலில் துணியால் ஆன மிதியடியையும், தூசிகளை தவிர்ப்பதற்கு தேங்காய் நாரினால் ஆன மிதியடியையும் ஒருசேர பயன்படுத்தலாம். காலணிகளை கழற்றி வைக்கும் இடத்தில் மிதியடி இருப்பது அவசியமானதாகும்.

துணிவகைகளே சிறந்தது

துணி அல்லது தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளை பயன்படுத்த வேண்டும். அவை ஈரத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக், ரப்பர் ஆகியவற்றால் ஆன மிதியடிகளை தவிர்ப்பது நலம்.

ஒரே வடிவமைப்பு


வீட்டில் உள்ள அனைத்து மிதியடிகளும் ஒரே வடிவமைப்பில் அமைந்திருந்தால் பார்ப்பதற்கு மேலும் அழகாக தோற்றமளிக்கும்.  

வீட்டில் எப்போதும் தேவைக்கும் சற்று கூடுதலாகவே மிதியடிகளை வாங்கி பாதுகாக்க வேண்டும். மழைக்காலங்களில் அல்லது வீட்டை சுத்தப்படுத்தும்போது கூடுதலாக இருப்பில் இருக்கும் மிதியடிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Next Story