குடிநீர் தொட்டி பராமரிப்பு


குடிநீர் தொட்டி  பராமரிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2017 1:00 AM IST (Updated: 24 Feb 2017 4:18 PM IST)
t-max-icont-min-icon

மேல்நிலை தொட்டிகள் மாடியில் அமைக்கும் போது பில்லர்கள் மீது கான்கிரீட் ‘ஸ்லாப்’ அமைத்துத்தான் கட்டப் பட வேண்டும். மேல்மாடி யின் தரைத் தளத்தின் மீது தொட்டியை கட்டுவது தவறான முறையாகும்.

மேல்நிலை தொட்டிகள் மாடியில் அமைக்கும் போது பில்லர்கள் மீது கான்கிரீட் ‘ஸ்லாப்’ அமைத்துத்தான் கட்டப் பட வேண்டும். மேல்மாடி யின் தரைத் தளத்தின் மீது தொட்டியை கட்டுவது தவறான முறையாகும். அதனால் நீர்கசிவுகள் சுவருக்குள் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி இருந்தால் தொட்டியின் உட்புற சுவர்களில் ‘வாட்டர் புரூப்’ சிமெண்டு கொண்டு நன்றாக பூசி விட வேண்டும். அப்போது தான் நீர்க்கசிவால் எவ்வித பிரச்சினையும் வராது.

காற்று, சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் பாசி படர்வதை தவிர்க்க இயலாது. காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொட்டியை கழுவியபின்பு அதில் தண்ணீர் நிரப்பி 100 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் ‘பிளீச்சிங்பவுடர்’ என்ற அளவில் கலந்து விட வேண்டும். அதனால் பாசி பிடிப்பது தடுக்கப்படும். ‘பிளீச்சிங் பவுடர்’ கலந்த தண்ணீர் முழுவதும் வெளியேறும் வரை அதை குடிக்க உபயோகிக்க கூடாது.

தரையடி நீர் தொட்டிகளின் மையத்தில் சிறிய குழியை அமைத்து, தொட்டியின் தரை வாட்டமானது அக்குழியை நோக்கி வருவதுபோல அமைக்க வேண்டும். தொட்டி சுத்தம் செய்யப்படும்போது கடைசியாக அதிலிருக்கும் மிகச்சிறிய அளவு தண்ணீர் அக்குழிக்குள் மட்டும் இருப்பதால் சிறிது தண்ணீர் கூட இல்லாமல் தொட்டியை சுத்தம் செய்வது சுலபமாக இருக்கும்.

Next Story