நன்மைகள் அதிகம் தரும் தலைவாசல் அமைப்புகள்
பொதுவாக அனைத்து விதமான கட்டமைப்புகளுக்கும், நான்கு முக்கிய திசைகள் மற்றும் நான்கு கோண திசைகள் என்று எட்டு விதமான திசை அமைப்புகள் இருக்கும்.
பொதுவாக அனைத்து விதமான கட்டமைப்புகளுக்கும், நான்கு முக்கிய திசைகள் மற்றும் நான்கு கோண திசைகள் என்று எட்டு விதமான திசை அமைப்புகள் இருக்கும். தலைவாசல் உள்ளிட்ட ஜன்னல்கள் போன்றவை, அவற்றை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்படுகின்றன முக்கியமாக, தலைவாசலுக்கான பகுதியை முடிவு செய்வது கட்டுமான ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
திசைகள்
திசைகள் நான்கும், ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் பெற்றவை என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. கிழக்கு என்பது இந்திரன் ஆட்சி செய்யும் இடமாகவும், வடக்கு என்பது குபேரனுக்கு உரிய இடமாகவும், மேற்கு என்பது வருண பகவானுக்கு உரியதாகவும், தெற்கு என்பது யமதர்மனுக்கு உரியதாகவும் கருதப்படுவது ஐதீகம். அந்த திசைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஈசானியம், ஆக்கினேயம், வாயவியம், நைருதி என்ற நான்கு கோண திசைகளை உருவாக்குகின்றன.
வட்ட வடிவ கட்டிடம்
பொதுவாக வீடுகள் வட்ட வடிவத்தில் கட்டமைக்கப்படுவது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. மேலும் வாஸ்து சாஸ்திரம் வட்ட வடிவ குடியிருப்புகள் அமைப்பதை அனுமதிக்கவில்லை. அழகியல் நோக்கம் கருதி ஒரு சில கட்டிடங்கள் அவ்வாறு அமைக்கப்படும் சூழலில் அதன் தலைவாசலுக்கான இடத்தை திசைகளின் அடிப்படையில், தேர்வு செய்வது சிக்கலாக இருக்கும். காரணம் வட்ட வடிவ அமைப்பில் இரு திசை இணைப்புகள் கோணமாக இல்லாமல், வளைவாக அமைந்திருக்கும். அதனால் வெளிப்புற சாலையை கவனத்தில் கொண்டு தலைவாசல் அமைக்கவேண்டும்.
கிழக்கு தலைவாசல்
இந்திர திக்கான கிழக்கில் தலைவாசல் அமைக்க, கிழக்கு பகுதி சுவரின் மொத்த அகலத்தை, வடக்கு தெற்காக, இரண்டு சரிசம பாகங்களாக பிரிக்கவேண்டும். அதில் வடக்கு திசையை சார்ந்து இருப்பது உச்ச பாகமாகும். கட்டமைப்பின் பிற வசதிகளுக்கு ஏற்ப தலைவாசலை அங்கே அமைத்துக்கொள்ளலாம்.
வடக்கு தலைவாசல்
குபேர திக்கான வடக்கு திசையில் தலைவாசல் அமைக்க, வடக்கு பகுதி சுவரின் மொத்த அகலத்தை கிழக்கு மேற்காக, இரண்டு சரிசம பாகங்களாக பிரிக்கவேண்டும். அதில் கிழக்கு பகுதியை சார்ந்து அமையும் பாதிப்பகுதி உச்சமாகும். மற்ற வசதிகளுக்கு தக்கவாறு தலைவாசலை அப்பகுதியில் அமைத்துக்கொள்ளலாம்.
மேற்கு தலைவாசல்
மேற்கு திசையில் தலைவாசல் அமைக்க, கட்டமைப்பின் மேற்கு பகுதியில் உள்ள சுவரின் மொத்த அகலத்தை வடக்கு தெற்கு என்று இரண்டு பிரிவாக பிரிக்கவேண்டும். அதில், வடக்கு திசை சார்ந்து அமையும் பகுதி உச்சம் ஆகும். கட்டமைப்பின் மற்ற வசதிகளுக்கு தக்கவாறு அப்பகுதியில் தலைவாசலை அமைத்துக்கொள்ளலாம்.
தெற்கு தலைவாசல்
தெற்கு திசையில் தலைவாசல் அமைக்க, கட்டிடத்தின் தெற்கு பக்க சுவரின் மொத்த அகலத்தை, கிழக்கு மேற்கு என்று இரண்டு பிரிவாக பிரிக்கவேண்டும். அதில் கிழக்கு திசை சார்ந்து அமையும் பாகம் உச்சமாகும். கட்டிடத்தின் மற்ற வசதிகளை கணக்கில்கொண்டு தலைவாசலை அங்கே அமைக்கலாம்.
மேற்கண்ட முறை தவிரவும் இன்னொரு முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி தலைவாசலை எந்த திசையில் அமைப்பதாக இருந்தாலும், குறிப்பிட்ட திசையின் மொத்த சுவர் அகலம், ஒன்பது பாகங்களாக பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும்போது மத்தியில் வரக்கூடிய நான்கு, ஐந்து மற்றும் ஆறு ஆகிய பாகங்களில் தலைவாசல் அமைப்பதும் நடைமுறையில் உள்ளது.

Next Story