‘ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்


‘ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்
x
தினத்தந்தி 1 April 2017 3:45 AM IST (Updated: 31 March 2017 6:09 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில்தான் உலகமே இயங்கிக்கொண்டுள்ளது.

மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில்தான் உலகமே இயங்கிக்கொண்டுள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்த, மின்சாதன அமைப்புகளை பொருத்தும்போது, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கவனித்து செயல்படுவது அவசியம். வீடுகள் கட்டமைக்கும்போது அல்லது அதற்கு பிறகு மின்சாதனங்களை பொருத்தும்போது கவனிக்க வேண்டிய அமைப்புகள் பற்றி மின்சார பொறியியல் வல்லுனர்கள் தரக்கூடிய ‘டிப்ஸ்கள்’ பற்றி பார்க்கலாம்.

1) அல்டர்னேட்டிங் கரண்ட் (ஏ.சி) மற்றும் டைரக்ட் கரண்ட் (டி.சி) சர்க்யூட்கள் தனித்தனி ‘ஒயரிங்’ அமைப்பாக இருக்க வேண்டும். ‘டி.சி’ சர்க்யூட்டில் ‘பாசிட்டிவ்’ மின்னோட்டத்தை குறிக்க சிவப்பு நிறத்திலும், ‘நெகட்டிவ்’ மின்மோட்டத்தை குறிக்க ‘கருப்பு’ நிறத்திலும் குறிப்பிட வேண்டும்.

2) ‘ஏ.சி’ மின் இணைப்பில் மூன்று பேஸ்களையும் முறையே, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய கலர்கள் கொண்டு குறிப்பிடுவது முக்கியம். ‘நியூட்ரல்’ கருப்பு நிறத்திலும், ‘எர்த்’ பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலும் இருக்கவேண்டும்.

3) 250 வோல்ட் அளவுக்கு மேல் மின்சார உபயோகம் இருக்கக்கூடிய ‘சர்க்யூட்’ அமைப்புகளில் அபாயம் என்ற குறியீடு இருக்கவேண்டும்.

4) ‘லைட்டிங்’ அமைப்புக்கான ‘சப்–சர்க்யூட்’ என்பது 10 பாயிண்டுகள், அல்லது 800 வாட்ஸ் லோடு கொண்டதாக இருக்கவேண்டும். ‘பவர்’ சப்–சர்க்யூட்டில் 2 பாயிண்டுகள் அல்லது 3000 வாட்ஸ் லோடு வரை மட்டுமே இணைப்புகள் இருக்கவேண்டும்.

5) மின்சாரத்திற்கான மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் ஆகியவற்றை கச்சிதமாக கணக்கிட்டு அதற்கு தக்கவாறு மின்சார உபகரணங்கள் பொருத்தப்படுவது மிக அவசியம்.

6) இரும்பு, செம்பு, அலுமினியம், ஈயம் போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து விதமான ‘ஒயரிங்’ உபகரணங்களையும் பூமியில் சரியான முறையில் ‘எர்த்திங்’ செய்யப்பட்டிருப்பது முக்கியம்.

7) ‘எர்த்’ தொடர்பு கடத்தியில் ‘சுவிட்ச்’ அல்லது ‘பியூஸ்’ இணைப்புகள் வருவது கூடாது.

8) ‘பியூஸ் யூனிட்’ வழியாக செல்லக்கூடிய மின்னோட்ட அளவுக்கு தக்க ‘பியூஸ் ஒயர்’ பொருத்தப்பட வேண்டும்.

9) எல்லாவிதமான ‘சப்–சர்க்யூட்’ அமைப்புகளும் ‘டிஸ்ட்ரிபியூ‌ஷன்’ போர்டிலிருந்து தனித்தனி ‘பியூஸ்’ கொண்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

10) பொதுவாக, அறைகளில் சுவிட்ச் போர்டு அமைக்கும்போது நுழை வாயிலுக்கு இடது பக்கமாக அமைப்பது வழக்கம். அப்போதுதான் வலது கை மூலம் ‘சுவிட்ச்’ போட முடியும். மேலும், தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் சுவிட்ச் போர்டு பொருத்துவது நல்லது.

11) தரையிலிருந்து ஏழு அல்லது எட்டு அடி உயரத்தில் மின்விசிறி மற்றும் ‘லைட் செட்டிங்’ இருப்பதுபோல பாயிண்டுகள் அமைப்பட வேண்டும்.

12) மின்சார மோட்டார் பொருத்தும்போது அதற்குரிய மெயின் சுவிட்ச், ‘ஸ்டார்ட்டர்’ போன்றவை பயன்படுத்துவதற்கு ஏற்ற உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

13) ‘மீடியம்’ மற்றும் அதற்கு மேற்பட்ட ‘வோல்டேஜ்’ அளவுகளில் இயக்கப்படும் எந்திரங்களுக்கு இரண்டு ‘எர்த்கள்’ இணைப்பு தரப்படுவது முக்கியம்.

Next Story