தரைத்தள பாதுகாப்பில் வண்ண விரிப்புகள்
வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் தரைத்தளங்கள் வெறும் சிமெண்டு பூச்சு மட்டும் கொண்டு அமைக்கப்படுவதில்லை.
வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் தரைத்தளங்கள் வெறும் சிமெண்டு பூச்சு மட்டும் கொண்டு அமைக்கப்படுவதில்லை. உபயோகம் அல்லது இடத்தின் தன்மை ஆகிய காரணிகளுக்கு ஏற்ப ‘டைல்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு ‘பதிக்கும் கற்கள்’ கொண்டு தரைத்தளங்கள் வலுவாகவும், அழகாகவும் அமைக்கப்படுகின்றன. கூடுதலாக, குறிப்பிட்ட அறையின் தோற்றத்தை மேலும் அழகாக காட்டுவதற்கும் தரை விரிப்புகள் உபயோகிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு
பல்வேறு வண்ணங்களும், வகைகளும் கொண்ட ‘கார்ப்பெட்’ அல்லது ‘மேட்’ ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் ‘ஹால்’ அல்லது அறைகளின் தரைத்தள தேய்மானம் தடுக்கப்படுகிறது. தொடர்ந்த பயன்பாடு காரணமாக அழுக்கு உள்ளிட்ட மற்ற பாதிப்புகள் ஏற்படாமலும் ‘கார்ப்பெட்’ வகைகள் பாதுகாக்கின்றன.
பல விதங்கள்
சற்று கூடுதல் விலை கொண்ட கம்பளி வகை ‘கார்ப்பெட்’ தொடங்கி நைலான், பாலியஸ்டர் மற்றும் தென்னை நார் என்று பல்வேறு பொருட்களால் அவை தயாரிக்கப்படுகின்றன. இழைகள் அல்லது நார்கள் பின்னப்பட்டுள்ள விதம், அழுத்தம் தாங்கும் திறன் ஆகியவற்றை கவனித்து அவற்றை வாங்க வேண்டும். தரைவிரிப்புகள் பல்வேறு விதங்களாக இருக்கும் நிலையில் அவற்றை சரியாக அறைகளுக்கு உபயோகிப்பது முக்கியம் என்று வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ‘கார்ப்பெட்’ உபயோகம் பற்றி அவர்கள் குறிப்பிடும் பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.
அறைகளுக்கேற்ற ‘கார்ப்பெட்’
வீட்டின் அனைத்து அறைகளுக்கும் ‘புளோர் மேட்’ அல்லது ‘கார்ப்பெட்’ வகைகளை பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அறைகளின் பயன்பாட்டுக்கு தக்கவாறு அவற்றை உபயோகப்படுத்தலாம். முக்கியமாக ஹாலுக்கு அழகு சேர்க்கும் ‘டிசைனர் கார்ப்பெட்’, ஈரம் புழங்கும் சமையலறைக்கான ‘ஆன்டி–பேட்டிக் மேட்’, மாடிப்படி வழுக்காமல் இருக்க ‘ஆன்டி–ஸ்லிப் மேட்’, உடற்பயிற்சி அறைக்கான ‘மேட்’, ‘ஸ்விட்ச் போர்டுக்கு’ அருகில் போடப்படும் ‘ஷாக்–புரூப் மேட்’ உள்ளிட்ட பல்வேறு விதங்களில் அவற்றை பயன்படுத்தலாம்.
இரு வகைகள்
அறைகளுக்கான தரைவிரிப்புகள் இரண்டு வகைகளாக உள்ளன. தரை முழுவதையும் மூடும் விரிப்புகள் ‘கார்பெட்’ எனப்படும். அறையின் கதவுக்கு அருகில் வெளிப்புறம் மற்றும் சோபா போன்ற இருக்கைகள் இல்லாத அறைகளில் அழகுக்காக விரிக்கப்படும் சிறிய அளவிலான விரிப்புகள் ‘மேட்’ அல்லது ‘ரக்ஸ்’ என்று சொல்லப்படும்.
குழந்தைகள்
சுட்டி குழந்தைகள் அதிகமாக ஓடி விளையாடும் இடங்களில் பயன்படுத்தும் ‘கார்ப்பெட்’ வகைகள் கெட்டியாகவும், அடர்த்தி அதிகமாகவும் இருப்பது முக்கியம். அப்போதுதான் அவர்கள் விளையாடும்போது கால் தடுக்கி கீழே விழ மாட்டார்கள். மேலும், அந்த இடங்களுக்கு சற்று அடர்ந்த நிறம் கொண்ட தரைவிரிப்பு சரியான தேர்வாக இருக்கும்.
தோற்றத்தில் மாற்றம்
அறையில் போடப்படும் ‘கார்பெட்’ நிறத்தை பொறுத்து அறையை சிறியதாக அல்லது பெரியதாக தோற்றம் தருவதுபோல மாற்ற இயலும். அதாவது அடர்ந்த நிறத்தில் ‘கார்ப்பெட்’ போடப்பட்ட அறை பெரியதாக இருந்தாலும் பார்ப்பதற்கு சிறியதாக தோற்றமளிக்கும். அதற்கு மாறாக வெளிர் நிறத்தில் ‘கார்ப்பெட்’ பயன்படுத்தும்போது சிறிய அறைகூட பெரியதாக தெரியும்.
‘கார்ப்பெட்’ தேர்வு
வீட்டின் சுவர்களுக்கு பூசப்பட்ட வண்ணம், மரச்சாமான்கள், வீட்டில் இருக்கும் அழகு சாதன பொருட்கள் போன்ற விபரங்களை ஒப்பிட்டு பார்த்த பின்பே அறைகளுக்கான தரை விரிப்புகளை முடிவு செய்யவேண்டும். அறையின் வெளிச்சம், பூசப்பட்ட பெயிண்டு உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கு இசைவான நிறத்தில் உள்ள ‘கார்ப்பெட்’ மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஒலி கட்டுப்பாடு
வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் தரைத்தளம் முழுவதற்கும் ‘கார்ப்பெட்’ விரிப்பது வழக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக அறையில் ஏற்படும் ஒலியின் பிரதிபலிப்பு பெருமளவு குறைகிறது என்று அறியப்பட்டுள்ளது.
பராமரிப்பு
‘கார்பெட்’ பராமரிப்பு என்பது சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டிய வேலையாகும். திரவ பொருட்கள் சிதறுவதால் உண்டாகும் கறை,
காலணிகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ‘ரக்ஸ்’ போன்ற சிறிய விரிப்புகளை சுத்தமாக பராமரிப்பது எளிதானதாக இருக்கும். அறை முழுவதும் விரிக்கப்பட்டுள்ள தரைவிரிப்பை ‘வாக்குவம் க்ளீனர்’ கொண்டு கச்சிதமாக தூசிகளை அப்புறப்படுத்தவேண்டும்.

Next Story