வண்ணங்கள் காட்டும் அழகிய தோற்றங்கள்
வீடு என்பது வெறும் கட்டமைப்பு என்ற நிலையை தாண்டி அழகிய இல்லமாக மாற்றக்கூடிய தன்மை வண்ணங்களுக்கு உண்டு.
'ஆள்பாதி.. ஆடை பாதி..' என்ற பழமொழி அனைவரும் நன்றாக அறிந்த ஒன்று. கச்சிதமான நிறம் கொண்ட ஆடைகளால் ஒருவரது புறத்தோற்றம் சிறப்பாக அமையும்.
அதேபோல ஒரு வீட்டிற்கு சரியான வண்ணங்களை தேர்ந்தெடுத்து, அழகான முறையில் 'பெயிண்டிங்' செய்யும்போது வீட்டின் தோற்றம் கண்ணை கவருவதாக அமையும். சிறந்த முறையில் வண்ணப்பூச்சு செய்யப்பட்ட வீட்டிற்கான 'மார்க்கெட் வேல்யூ' அதிகம் என்ற வணிக ரீதியான கண்ணோட்டத்துடன் வீடுகள் 'பெயிண்டிங்' செய்யப்படுகின்றன.
பலவிதங்களில் இருக்கும் வண்ணங்களை தேர்ந்தெடுத்து பூசுவதற்கு முன்பு நடைமுறையில் இருக்கும் 'பெயிண்டு' வகைகள் என்ன..? வீடுகளில் இருக்கும் பல பாகங்களில் எங்கெல்லாம் வண்ணப்பூச்சு செய்யவேண்டும்..? என்பது பற்றி தொழில்முறை 'பெயிண்டர்கள்' தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை இங்கே காணலாம்.
வீட்டின் பாகங்கள்
ஒட்டுமொத்தமாக வீடுகளுக்கு நான்கு இடங்களில் 'பெயிண்டு' வகைகள் பூசப்பட வேண்டியதாக இருக்கும். முதலாவது உட்புற சுவர்கள் மற்றும் மேற்கூரைகள். இரண்டாவது வெளிப்புற சுவர்கள். மூன்றாவது வீடுகளில் உள்ள மரச்சாமான்கள். நான்காவது வீடுகளில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட மற்ற உலோக சாமான்கள்.
அறைகளுக்குள் குளிர்ச்சி
வீடுகளுக்குள் குளிர்ச்சியான தன்மையை ஏற்படுத்துவதில் 'இண்டீரியர் பெயிண்டு' வகைகள் முக்கியமான இடத்தில் இருக்கின்றன. உட்புறமாக பூசப்படும் வண்ணங்களில் 'டிஸ்டெம்பர்' மற்றும் 'எமல்ஷன்' ஆகிய இரண்டு வகைகள் உண்டு. 'டிஸ்டெம்பர்' வகை வண்ணங்களில் 'அக்ரிலிக்', 'சிந்தெடிக்', 'டிரை டிஸ்டெம்பர்' என்று பலவிதங்கள் இருக்கின்றன.
அவற்றில் 'அக்ரிலிக்' வகை வண்ணங்கள் தண்ணீர் பட்டாலும் அவ்வளவாக பாதிக்கப்படுவதில்லை. அதனால் உட்புறமாக உள்ள செங்கல் சுவர்களை பூசுவதற்கும், உட்புறம் இருக்கும் மற்ற சுவர் பரப்புகளை பூசுவதற்கும் இவ்வகை பரிந்துரை
செய்யப்படுகிறது. 'சிந்தெடிக் மற்றும் டிரை டிஸ்டெம்பர்கள்' தண்ணீரால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவையாக இருப்பதால் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
வகைகள்
இன்னொரு வகையான 'எமல்ஷன்' பெயிண்டுகள் 'ரெகுலர், எக்கானமி மற்றும் பிரிமியம்' என்று மூன்று வகைகளில் உள்ளன. 'பிளாஸ்டிக்' வகையை சேர்ந்ததாக இருப்பதால் தண்ணீரால் உண்டாகும் பாதிப்புகள் இல்லாமல் நீடித்து பயன் தரக்கூடியவையாக இவை உள்ளன.
மரச்சாமான்கள்
மரத்தால் செய்யப்பட்ட அனைத்து வகை பொருட்களுக்கும் மேலே பூசப்படும் பொருள் 'வார்னிஷ்' ஆகும். கதவு, ஜன்னல், கட்டில், டேபிள், மேசை
ஆகிய அனைத்துவகை பொருட்களுக்கும் மேலே 'கோட்டிங்' செய்யப்படும் பொருளாக 'வார்னிஷ்' இருக்கிறது. இப்போது அதற்கு பதிலாக 'டச் வுட் பெயிண்டு' என்ற புதிய வகை அறிமுகமாகி உள்ளது. மரப்பொருட்களின் நீடித்த உழைப்புக்கு அது உறுதுணையாக உள்ளது.
உலோக பொருட்கள்
இரும்பு, செம்பு மற்றும் பித்தளை வகை பொருட்களுக்கு 'எனாமல்' வகை வண்ணம் பூசுவது வழக்கமான முறை. அதில் 'பிரிமியம் எனாமல் பெயிண்டு' வகையானது நல்ல தோற்றத்தையும், தட்பவெப்ப பாதுகாப்பையும் தருவதாக இருப்பதால் உலோக சாமான்களுக்கு பூசுவதற்கு ஏற்றதாக உள்ளது.
வெளிப்புற வண்ணங்கள்
வெளிப்புறம் பூசக்கூடிய வண்ணங்கள் சுவர்களுக்கு பாதுகாப்பாகவும், அழகான தோற்றத்தை தருவதாகவும் இருக்க வேண்டும். 'ஆயில் பேஸ்டு பெயிண்டுகள்' பெரும்பாலும் வெளிப்புறமாக பூசுவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. 'சிமெண்டு பெயிண்டு', 'அக்ரிலிக் எமல்ஷன்' மற்றும் 'டெக்ஸர்டு பிளாஸ்டர்' என்ற வகைகள் வெளிப்புற பூச்சுகளில் உள்ளன. இவற்றில் 'அக்ரிலிக் எமல்ஷன்' வகையானது நல்ல தோற்றத்தையும், தட்பவெப்பத்திலிருந்து பாதுகாப்பையும் தருவதால் அதிகபட்ச உபயோகத்தில் இருந்து வருகிறது.

Next Story