தெரிந்துகொள்வோம்: 'பேஸ்போர்டு'


தெரிந்துகொள்வோம்: பேஸ்போர்டு
x
தினத்தந்தி 14 April 2017 10:30 PM GMT (Updated: 14 April 2017 12:41 PM GMT)

வீட்டின் சுவர்களும் தரைப்பகுதியும் இணையும் இடமானது மரப்பலகைகள் அல்லது 'டைல்ஸ்' வகைகள் ஒட்டப்பட்டு, அப்பகுதி சற்றே வித்தியாசப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதை பல இடங்களில் பார்த்திருப்போம்.

அந்த முறையானது 'பேஸ்போர்டு' என்று சொல்லப்படும். பெரும்பாலும் நமது பகுதிகளில் டைல்ஸ் அல்லது மார்பிள் வகை கற்கள் தரையின் வண்ணத்திற்கேற்ப பதிக்கப்படுவது வழக்கம். மேலும், அழகுக்காக ஒட்டு மரப்பலகைகள் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.

5 அல்லது 6 அங்குல மரப்பலகையானது அறையின் அளவுக்கேற்பவும், தரைத்தள அமைப்புக்கு ஏற்பவும் பதிக்கப்படும். அந்த பலகைக்கு கீழ்ப்புறமாக ஒட்டப்படும் சிறிய அளவு மர 'பீஸ்' ஆனது 'பேஸ் ஷ¨' என்று சொல்லப்படும். அந்த பலகைக்கு மேற்புறமாக பதிக்கப்படும் மர 'பீஸ்' ஆனது 'பேஸ் கேப்' என்று சொல்லப்படும். இந்த முறைக்கு 'ஸ்கர்டிங்' மற்றும் 'புளோர் மோல்டிங்' என்ற பெயர்களும் உண்டு. 

Next Story