தெரிந்துகொள்வோம்: ‘அட்டிக்’


தெரிந்துகொள்வோம்: ‘அட்டிக்’
x
தினத்தந்தி 22 April 2017 12:09 PM IST (Updated: 22 April 2017 12:08 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலும் இவ்வகை ‘அட்டிக்’ அமைப்புகள் ‘ஹையர் பட்ஜெட்’ வீடுகளில் கட்டமைக்கப்படுவது வழக்கம்.

மிழில் இதை பரண் என்றும், மாடம் என்றும் குறிப்பிடலாம். அதாவது சரிவான கூரை அமைப்பு கொண்ட வீடுகளில் மேற்கூரைக்கு கீழ்ப்புறம் இருப்பதுபோல வீட்டுக்குள் அமைக்கப்படும் மாடம் என்று சொல்லலாம். இந்த அமைப்பு மூலமாக அறையின் வெப்பம் மற்றும் குளிர் போன்றவை தடுக்கப்படுவதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளில் இவ்வகை அமைப்புகள் படுக்கை அறையாக பயன்படுத்தப்படும். நமது பகுதிகளிலும் இவ்வகை அமைப்பானது படுக்கை அறையாகவும், ‘ஸ்டோரேஜ் லாப்ட்’ போன்றும் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இவ்வகை ‘அட்டிக்’ அமைப்புகள் ‘ஹையர் பட்ஜெட்’ வீடுகளில் கட்டமைக்கப்படுவது வழக்கம். ‘அட்டிக்’ மீது ஏறிச்செல்வதற்கு மரத்தால் செய்யப்பட்ட படிக்கட்டுகள் அல்லது ஏணி பயன்படுத்தப்படும்.

Next Story