சிக்கன கட்டமைப்புக்கு ஏற்ற சில வழிகள்
‘யானை அசைந்து தின்னும்.. வீடு அசையாமல் தின்னும்..’ என்ற பழமொழி நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான்.
‘யானை அசைந்து தின்னும்.. வீடு அசையாமல் தின்னும்..’ என்ற பழமொழி நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான். அதாவது, வீடு என்ற கட்டமைப்பு அசையாமல் ஒரே இடத்தில் இருந்தாலும் கட்டுமான நிலையில் தொடங்கி, அதன் பல்வேறு பராமரிப்புகள் உள்ளிட்ட ஒவ்வொரு நிலையிலும் செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அந்த செலவுகள் சிறியது அல்லது பெரியது என்ற வரையறைகள் இல்லாமல், செய்யக்கூடிய பணிகளுக்கு ஏற்ற விதத்தில் கட்டிட உரிமையாளருக்கு சுமையாக மாறி விடுகிறது.
பல்வேறு பராமரிப்புகள்
கட்டுமான செலவுகள் எகிறுவது ஆரம்ப கட்ட சுமை என்று இருந்தாலும், கட்டி முடித்த கட்டிடங்களுக்கு வாராந்திர பராமரிப்புகள், மாதாந்திர பராமரிப்புகள் மற்றும் வருடாந்திர பாரமரிப்புகள் என்ற நிலையில் தொடர்ச்சியான செலவுகள் ஏற்படுவது பொதுவானது. எவ்வகையிலாவது எகிறும் செலவுகளை கட்டுப்படுத்த முடியுமா..? என்ற கேள்விகள் பலருக்கும் இருந்து வரும்.
வல்லுனர் ஆலோசனை
அவர்களது கேள்விகளுக்கு தக்க பதிலை மதிப்பு பொறியியல் (வேல்யூ என்ஜினியரிங்) வல்லுனர்கள் தந்திருக்கின்றனர். கட்டிட அமைப்புகளில் எந்தெந்த வகைகளில் செலவினங்களை குறைக்கலாம் என்ற ஆலோசனைகளை கூறும் அந்த துறை வல்லுனர்கள் தந்திருக்கும் குறிப்புகளின் சுருக்கமான தொகுப்பை இங்கே காணலாம்.
1. கட்டமைப்பின் சுவர்களில் சிமெண்டு பூச்சு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பூச்சு, பெயிண்டு அடிப்பது ஆகிய பணிகள் செய்யப்படாமல் வெறுமனே விடப்பட்டால், பனி மற்றும் மழைக்காலத்தில் வீட்டிற்கு உள்ளே வெப்பமாகவும், சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் வீடுகளுக்குள் குளிர்ச்சியாகவும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சுவர்ப்பூச்சு செய்யும் செலவும் இல்லை. இந்த முறையானது அவ்வளவாக நடைமுறையில் இல்லை என்ற சூழலில், கட்டமைப்புகளின் உட்புற சுவர்களுக்கு இந்த முறையை கடைபிடிக்கலாம்.
2. தற்போது அமைக்கப்படும் கட்டிடங்கள், கனசதுர வடிவத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அவற்றின் கூரைகள் சம தளமாக இருக்கும். செவ்வகம் மற்றும் கனசதுர கட்டமைப்புகள் அதிகப்படியான சுவர் பரப்புகளை கொண்டவையாக அறியப்பட்டுள்ளன. அதனால், ஒட்டு மொத்த கட்டமைப்பும் வெவ்வேறு வடிவங்களில் அமைவது போல பார்த்துக்கொண்டால் ஓரளவு சிக்கனம் சாத்தியம்.
3. கடைக்கால் எடுக்கும்போது கிடைக்கும் மண்ணை, இயன்ற வரையில் அந்த கட்டிடத்துக்கே பயன்படுத்த முயற்சிப்பதும் சிக்கன நடவடிக்கைதான்.
4. கட்டமைப்பின் அஸ்திவாரத்தை அமைக்கும்போது, கட்டுமான பொறியாளர்களது ஆலோசனைப்படி செயல்படுவது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல செலவுகளை தவிர்க்க உதவி செய்யும் என்ற உண்மை பலரும் அறியாதது.
5. கட்டமைப்பின் வெளிப்புறத்தில் சுவரும், தரைப்பரப்பும் சந்திக்கும் இடத்தை தார் கொண்டு பூச்சு செய்வதால் கரையான் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தால் சுவர் பாதிப்பு போன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படும்.
6. கட்டுமான பணிகளுக்கு தேவையான செங்கல் உள்ளிட்ட பொருட்களை கூடுமானவரை அருகில் இருந்து தருவித்துக்கொள்வதன் மூலம் போக்குவரத்து செலவில் ஓரளவு மிச்சம் பிடிக்க முடியும்.
7. அறைகளின் மூலைகளில் அலமாரிகளை அமைக்கலாம். அது சரியான இடமாகவும், வலுவான இடமாகவும் இருப்பதால் அதிகமான மராமத்து வேலைகள் கார்னர் அலமாரிக்கு இருப்பதில்லை என்று உள்ளலங்கார நிபுணர்கள் சொல்வது கவனத்துக்குரியது.
8. ஒலிப் பொறியியல் சார்ந்ததாக வீடுகள் கட்டமைக்கப்படுவது அவசியம். அதாவது, வெளிப்புற சத்தங்கள் வீடுகளுக்குள் எதிரொலிக்கும் வகையில்தான் இன்றைய கட்டமைப்புகள் இருக்கின்றன.
9. ஒலியை தடுக்க தடிமனான சுவர் அமைப்புகள் அவசியம். குறிப்பாக சாலையோரம் உள்ள கட்டிடங்களில் ஏற்படும் அதிர்வுகள் காலப்போக்கில் சுவர் விரிசல்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
10. முக்கியமாக, அறைகளின் உட்புற சுவர்களில் ‘டைல்ஸ்’ வகைகள் ஒட்டுவது தவறு. அவ்வாறு ஒட்டப்படும்போது, சுவர்களுக்கான சுவாசம் தடைப்பட்டு, தட்பவெப்ப நிலை மாற்றங்களால் வீடுகளுக்குள் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

Related Tags :
Next Story