உப்பு காற்று அரிப்பை தடுக்கும் சிமெண்டு


உப்பு காற்று அரிப்பை தடுக்கும் சிமெண்டு
x
தினத்தந்தி 29 April 2017 2:30 AM IST (Updated: 28 April 2017 7:26 PM IST)
t-max-icont-min-icon

கடற்கரை ஓரங்களில் கட்டப்படும் வீடுகள் உள்ளிட்ட மற்ற கட்டமைப்புகள் அனைத்தும் கடல் காற்றில் கலந்துள்ள உப்புத்தன்மை காரணமாக சுவர் அரிப்புக்கு உள்ளாகின்றன.

டற்கரை ஓரங்களில் கட்டப்படும் வீடுகள் உள்ளிட்ட மற்ற கட்டமைப்புகள் அனைத்தும் கடல் காற்றில் கலந்துள்ள உப்புத்தன்மை காரணமாக சுவர் அரிப்புக்கு உள்ளாகின்றன. கடற்கரையை ஒட்டியவாறு 40 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் அனைத்துவிதமான கட்டிட அமைப்புகளும் உப்புக்காற்றால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய பாதிப்புகளில் இருந்து கட்டுமானங்களை பாதுகாக்க புது வகை சிமெண்டு உபயோகத்தில் உள்ளது. அதன் பெயர் எஸ்.ஆர்.சி. ஆகும். அதாவது ‘சல்பேட் ரெசிஸ்டிங் போர்ட்லாண்ட் சிமெண்டு’ என்பதாகும்.

கட்டமைப்புகளில் இவ்வகை சிமெண்டு பயன்படுத்தும்போது காற்றில் கலந்துள்ள உப்புத்தன்மையால் அல்லது நீரில் கலந்துள்ள உப்புத்தன்மையால் பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. எஸ்.ஆர்.சி வகை சிமெண்டு பயன்படுத்திய கட்டமைப்புகளுக்கு அதிகப்படியான பராமரிப்புகள் வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடல் காற்றின் அரிப்பை தடுப்பது மட்டுமல்லாமல், தண்ணீருக்குள் அமைக்கப்படும் பில்லர்கள், கட்டமைப்புகள், உவர் நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்கள், அதிகமாக தண்ணீர் புழங்கும் இடங்கள், கழிவு நீர் பாதைகள், ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படும் இடங்கள் ஆகிய இடங்களில் இந்த சிமெண்டை  பயன்படுத்தலாம். அதன் மூலம் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய வெளிப்புற அரிப்புகள் தடுக்கப்படும்.


Next Story