விரைவான கட்டுமான பணிகளுக்கு புதுமையான தொழில் நுட்பம்
கட்டமைப்புகளின் வடிவம் மற்றும் அமைக்கும் முறை ஆகியவை நாட்டுக்கு நாடு மாறும் தன்மையை கொண்டதாக இருக்கின்றன.
கட்டமைப்புகளின் வடிவம் மற்றும் அமைக்கும் முறை ஆகியவை நாட்டுக்கு நாடு மாறும் தன்மையை கொண்டதாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளின் கட்டிட பாணியானது மற்ற உலக நாடுகளிலிருந்து வேறு பட்டதாக இருக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் ஆசிய நாடுகளின் கட்டிட பாணிகளுக்கும், மேற்கத்திய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பாணிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
ஜி.சி.டி கான்கிரீட்
கட்டுமானத்துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக தற்போது பல்வேறு புதுமையான தொழில் நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய வளர்ச்சிகள் காரணமாக கட்டுமான பணிகள் விரைவாக செய்து முடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் விஷேசமாக தயாரிக்கப்படும் ‘கான்கிரீட் அமைப்பு’ பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். அந்த முறையானது ஜி.சி.டி அதாவது ‘கல்ப் கான்கிரீட் டெக்னாலஜி’ என்று வழங்கப்படுகிறது.
அதிக பளு இல்லை
அமெரிக்க நாட்டின், போர்டோ ரிகோவில் உள்ள கட்டுமான நிறுவனத்தால் மேற்கண்ட தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அவசர உலகத்துக்கு தேவையான விரைவான கட்டுமானத்தை அமைப்பதற்கு தக்கவாறு இந்த தொழில் நுட்பம் அமைந்துள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது அதிகப்படியான வேலைப்பளு இருப்பதில்லை. காரணம், இந்த முறையில் ‘பிரி பேப்ரிகேட்டடு மெத்தட்’ மூலமாக முன்னதாகவே கட்டிட அமைப்புகள் தனித்தனியாக தயாரிக்கப்படும். அவை கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, ஒரு சில பணிகளுக்கு பிறகு முழுமையாக கட்டமைப்பாக உருவாக்கப்படும். இந்த கட்டுமான நுட்பத்தில் ‘டெட் லோடு’ என்று சொல்லப்படும் அதிக எடை பாதிப்பு வெகுவாக குறைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
அமைக்கும் விதம்
சி.ஐ என்று சொல்லப்படும் ‘கால்வனைஸ்டு அயர்ன்’ வலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டு, அவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் ‘பாலிஸ்டைரின் ஷீட்’ வைக்கப்படும்.
அதன் கூடுதலான உறுதிக்காக, வெளிப்பகுதியில் இருந்து வலுவான இரும்பு கம்பிகள் அந்த ‘பாலிஸ்டைரின்’ அமைப்புக்குள்ளாக செலுத்தப்படும். அந்த இரும்பு கம்பிகளோடு, வெளிப்புற கம்பி வலைகளோடு ‘வெல்டிங்’ செய்து இணைக்கப்படும். அதாவது, இரண்டு வலுவான பலகை போன்ற கம்பி வலைக்கு நடுவில் ‘பாலிஸ்டைரின்’ வைக்கப்பட்டு தேவைப்படும் அளவிற்கேற்ப சுவர் போன்று வடிவமைக்கப்படுகிறது.
‘கான்கிரீட் ஸ்பிரேயர்’
அந்த வேலைகள் முடிந்த பிறகு கட்டுமானம் நடைபெற வேண்டிய இடத்தில் அவற்றை சரியான அளவுகளில் பொருத்தி கட்டமைப்பை வடிவமைக்கலாம். அதன் பிறகு தக்க வலுவான கான்கிரீட் கலவை அதன் இரண்டு பக்கங்களிலும் ‘கான்கிரீட் ஸ்பிரேயர்’ கொண்டு ‘ஸ்பிரே’ செய்யப்பட்டு சுவராக மாற்றப்படும். இந்த தொழில் நுட்பம் காரணமாக சுவர்கள் உள்ளிட்ட கூரை அமைப்புகள் விரைவில் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டிடங்கள், அதிகப்படியான வெப்பம் மற்றும் பெரும் சூறாவளி காற்று ஆகிய இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் தன்மையை கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும், 8 என்ற ‘ரிக்டர்’ அளவு கொண்ட பூகம்பத்திலும் இவை, மிக குறைந்த பாதிப்புக்கு உள்ளாவதும், வெளிப்புற இரைச்சல்கள் கட்டிட அமைப்புக்குள் ஊடுருவுவதை தடுப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story